Skip to main content

சிறிலங்கா: பொருளாதார பின்னடைவினை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள், மனித உரிமைகளை சீரழிவு அடையச் செய்துள்ளது.

சிறுபான்மையினர்களிற்கும், கருத்து வேறுபாடு உள்ளவர்களிற்கும் எதிரான அடக்குமுறைகள் உச்சமட்டத்தில்,

2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் திகதி சிறிலங்காவில் ககாழும்பில் இருக்கும் காலிமுகத்திடலில் வாடிக்ககயாளரின்  வருககக்கு  காத்திருக்கும்  அங்காடி  உணவு  விற்பகையாளரின்  படம்  -   9/4/2023. © 2023 Thilina Kaluthotage/NurPhoto via AP

(பாங்கொக் ) பின்னோக்கிச் செல்லும் போக்கிலான அரச கொள்கைகளும், போதியளவில் இல்லாத சமூக பாதுகாப்பு ஏற்பாடுகளும், பல இலங்;கையர்களுக்கு அந்நாட்டின் பொருளாதார பின்னடைவு பெரும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய அனர்த்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று வெளியிடப்;பட்டுள்ள மனித உரிமைகள் காப்பகத்தின் 2024ம் ஆண்டின் உலக அறிக்கையில் குறிப்பிடப்படடிருக்கிறது. ஐனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் அரசு தொடர்ந்து கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையினையும், ஒன்று கூடலுக்கான உரிமையினையும், தொடர்ந்து அரசு சிறுபான்மையினங்களிற்கு எதிராக வேறுபாடு காட்டும் கொள்கைகளை தொடர்ந்து செயற்படுத்தி வருகிறது.

“பகுதியளவில் ஊழலினாலும், பொறுப்பற்ற ஆட்சியினாலும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினால் கோடிக்;கணக்கிலான  இலங்கையர்கள் உயிர் வாழ முடியாத நிலையில் துடித்துக் கொண்டுள்ளனர் என மனித உரிமைகள் காப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கூறியுள்ளார். “பொறுப்பு கூறுதலுக்கும், ஐனநாயக அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதற்கும், தேவைப்படும் கருத்து வெளிப்படுத்தல்களை அரசு தற்போது வசதிகள் மிக குறைந்தவர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்க கூடிய கொள்கைகளை தற்போதுள்ள நிர்வாகம் நடைமுறைப்படுத்தி பதிலளிக்கின்றது”.

மனித உரிமை காப்பகத்தின் 2024 ம் ஆண்டிற்கான 734 பக்கங்களைக் கொண்ட உலக அறிக்கையின் 34 வது பதிப்பில் 100க்குஅதிகமான நாடுகளின் மனித உரிமைச் செயற்பாடுகள் காப்பகத்தினால் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் நிறைவேற்றுப் பணிப்பாளரான   திராணா கா~ன்  தனது அறிமுக ஆக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.2023ம் ஆண்டு மனித உரிமைகளை அடக்குவது தொடர்பிலும் போர்க்கால கொடூர செயலாலும் ஆன சம்பவங்கள் நிறைந்த ஒரு வருடம் ஆகும் அவ்வாறு மாத்திரமின்றி, தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளின் ஆட்டுழியங்களும,; பரிவர்த்தன, ராஐதந்திர செயற்பாடுகளும் அவ்விடயங்களோடு தொடர்பற்றவர்களின் உரிமைகளை பாதிக்கக் கூடியவையாகவும் இருந்தன. எனினும் இவ் நிகழ்வுகளின் போது நம்பிக்கையூட்டக் கூடிய குறியீடுகள் இருந்தனவென்றும் அவை இவ் விடயங்கள் தொடர்பாக வேறு ஒரு பாதையில் செல்லக் கூடியதாக இருப்பதை காட்டியது என்றும் கூறி அரசுகள் இடைவிடாது மனித உரிமைகள் தொடர்பிலான கடைப்பாடுகளை நிலைநாட்ட வேண்டும் என்று கூறிப்பிட்டுள்ளார். 

அந் நாட்டிற்கான மனித உரிமைகளை கவனத்தில் எடுக்காது, அங்கு நிலவும் பொருளாதார நிலைக்கு பரிகாரம் தேடுகையில் சிறிலங்கா அரசாங்கமும், சர்வதேச நாணய நிதியமும் (IMF) பரிகார ஏற்பாடுகள் செய்ய ஒழுங்குகள் செய்துள்ளன. இலங்கையில் 17மூ சதவீதத்திற்கு அதிகமானோர் குறிப்பிட்டளவில் அல்லது பெருமளவில் உணவு பற்றாக்குறையினாலும், மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலையிலும் உள்ளனர். அத்துடன் 31மூ சதவீதமான ஐந்து வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் போசாக்கு குன்றிய நிலையில் உள்ளனர் என்பது ஜக்கிய நாடுகள் அமைப்பின் கூற்றாகும். அரச வருமானத்தை அதிகரிப்பதிலும், ஊழலை கட்டுப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதிலும் சமூக பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதிலும் IMF ன் நிகழ்சிநிரல் கவனம் செலுத்தியுள்ளது. எனினும் இவ்விடயம் தொடர்பில் யாதர்த்த நிலைக்கு திரும்பும் பொறுப்பினை பிரதானமாக குறைந்த வருமானம் உள்ள மக்கள் மீது சுமத்தியுள்ளது.

மின்சாரகட்டணம்  அதிகரிக்கப்பட்டு பெறுமதிசேர் வரிகள் இரட்டிப்பாக்கப்பட்டு கட்டம் கட்டமாக எரிபொருள் மானியம் நீக்கப்பட்டது முதலியவற்றை அரசாங்கம் செய்தது. அவர்கள் ஏற்படுத்திய மறுசீரமைப்பு நிகழ்ச்சியின் 0.6 % சதவீதமான மொத்த உள்நாட்டு உற்பத்தியாக (GDP) 

சமூக செலவினம் வரையறுக்கப்பட்டது. இது அபிவிருத்தி அடைந்து கொண்டு வரும் நாடுகளின் அரைவாசியை விட குறைவாக உள்ளது. அரசினால் திட்டமிடப்பட்டு தெரிவு செய்யப்பட்டோருக்கான சமூக பாதுகாப்பு நன்மைகள் போதிய வாழ்கை தரம் அற்றவர்களுக்கு கிடைப்பதில் இருந்து விலக்களிக்க வழி செய்தது. உள்ளக கடன்களை முகாமை செய்யும் முயற்சியில் சாதாரண மக்களின் சேமிப்புக்களை கொண்டுள்ள அரசினால் நடத்தப்படும் ஓய்;வூதிய நிதிகளின் பெறு மதியை குறைவடையச் செய்தது.

வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும், மனித உரிமைகள் ஆர்வலர்களும் அரசின் அச்சுறுத்தல்களுக்கும், கண்காணிப்புக்கும் ஆளாக நேர்ந்துள்ளது. தமிழ் முஸ்லிம் சமூகத்தினர்களின்  ஆதனங்களும், சமய வழிபாட்டுத் தலங்களும் அரச முகவர் அமைப்புக்களின் கொள்கைகளுக்கமைய காணி பறிமுதல் செய்வதற்கு இலக்காக்கியுள்ளனர்.

கொடூர  பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்படுத்தப்படிருந்த இடைக்ககால தடையினை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வேறுபட்ட கருத்து தெரிவிப்பதை அடக்கும் உத்தேசத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டிருந்த  புதிய சட்டமேனும் மீளாய்வு செய்வதற்கென மீளப்பெறப்பட்டிருந்த அவ் உத்தேச சட்டம் அதிகாரிகளிற்கு விரிவான அதிகாரங்களை வழங்கி, புதிய சொற்பிரயோகம் தொடர்பான குற்றங்களை உருவாக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது. உத்தேச ஒன்லைன் பாதுகாப்பு மசோதா ஐனாதிபதியினால் ஒரு ஆணைக்குழுவை உருவாக்கி பேச்சு சுதந்திரத்தை மேலும் வரையறுத்து சம்பந்தப்பட்ட கூற்று உண்மையானதா, அல்லது தவிர்க்கப்பட வேண்டியதா எனக் கணித்து அவற்றை நீக்கும் படியும் அது தொடர்பில் பொலிஸார் புலனாய்வு செய்யவும், வழக்குத் தொடரவும் வழிவகை  செய்கிறது.

Your tax deductible gift can help stop human rights violations and save lives around the world.

Region / Country

Most Viewed