Skip to main content

இலங்கை

2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் திகதி சிறிலங்காவில் ககாழும்பில் இருக்கும் காலிமுகத்திடலில் வாடிக்ககயாளரின்  வருககக்கு  காத்திருக்கும்  அங்காடி  உணவு  விற்பகையாளரின்  படம்  -   9/4/2023.

© 2023 Thilina Kaluthotage/NurPhoto via AP

அரசாங்கத்தின் பின்நோக்கிச் செல்லும் போக்கினை கொண்ட திட்டங்களும், சமூக பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளின் பற்றாக்குறை நாட்டின்; பொருளாதார நெருக்கடி நிலையின் பாரிய தாக்கங்களின் விளைவுகள் பல இலங்கையர்களை இடர்பாடு நிலைக்கு உள்ளாக்கியுள்ளது.

2022 வெளிநாட்டு கடன்களுக்காக செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்த முடியாது போன பின்னர் இலங்கையில் உடனடியாக எழுந்த பொருளாதார நெருக்கடி நிலையை எதிர் கொள்ள உதவுவதற்கு சர்வதேச நாணய நிதி நிறுவனம் (IMF)  மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. எனினும் குறித்த பொருளாதார நிலையை எதிர் கொள்வதற்கு ஐஆகு ம் அரசாங்கமும் எடுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை கவனத்தில் எடுக்காது விட்டதன் விளைவாக நாட்டின் சனத்தொகையின் 17 சதவீத மனோரை மிதமான அல்;லது உன்னிப்பாக உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியதன் விளைவாக 31 சதவீதமான ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களை போசாக்கு குறைவான பிள்;ளைகள் ஆக்கியது. இது உலக உணவு செயற்திட்டத்தின் கணிப்பிற்கு அமைவானதாகும்.

2022 ம் ஆண்டு மாதக்; கணக்கில் அவருக்கு முன்னர் இருந்த ஜனாதிபதி ஆட்சேபனைகள் தெரிவித்ததன் விளைவாக, அவர் பதவி விட்டுச் சென்ற பின்னர், பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தினை PTA பயன்படுத்துவதனை இடைநிறுத்தி இருந்ததை நீக்கி, மாற்றுக் கருத்து கொண்டு இருந்தவர்களை அடக்க முற்பட்டார். பின்னர் நிறைவேற்றப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும், ஜனாதிபதிக்கும் பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கி பேச்சு சுதந்திரம் தொடர்பிலான புதிய குற்றங்களை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது. அத்துடன் வேறு உத்தேச சட்டவாக்கங்கள் மூலம் இணையத்தளங்கள் ஊடாக கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரத்தினையும் வரையறுக்க முயற்சி எடுக்கப்பட்டது. 

1983 ல் இருந்து 2009வரை நடைபெற்;ற உள்நாட்டுப் போரின்  விளைவாக கடந்த கால மனித உரிமை மீறல்களினால் பாதிப்புற்றோர் அவர்களின் குடும்பத்தினரும், செயற்பாட்டாளர்களும் உண்மையை கண்டறிவதற்கும் பெறுப்பு கூறலை உறுதிப்படுத்துவதற்கும் என இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் செயற்பட்ட பொலிஸாரினாலும், புலனாய்வு அமைப்பின் முகவர்களாலும் அச்சுறுத்தலுக்கும் கண்காணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். 

பொருளாதார சமூக உரிமைகள்

 2021 – 2022 வரையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் நிமித்தம் அந்நாட்டு மக்களின் வறுமை நிலை இரட்டிப்பாகி 25 சதவீதம் அடைந்தது. அந்நிலை மேலும் அதிகரிக்கப்படும் என கணிப்பிடப்பட்டுள்ளது. 

உதாரணமாக இவற்றை கூறலாம்,  IMF  உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அரசு மின் கட்டணங்களை அதிகரித்தது. பெறுமதி சேர் வரியினை இரட்டிப்பாக்கியது. அத்துடன் எரி பொருளுக்கான மானியத்தை கட்டம் கட்டமாக வரையறுத்தது. இவற்றின் விளைவாக விலைகள் அதிகரித்தன. மறுசீரமைப்பு நிகழ்ச்சியில் சமூக செலவுகளின் அளவு மட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீதமாக மாத்திரமே  சமூக பாதுகாப்பு நிகழ்சிகளிற்கு வரையறுக்கப்பட்டது. இது அபிவிருத்தி அடைந்து கொண்டு வரும் நாடுகளின் சரசரியாக 1.6 வீதம் குறைவானதாகிற்று. 

சமூக பாதுகாப்பு உதவிகளை அரசின் திட்டங்கள் குறிவைத்தமையால் போதியளவு வாழ்க்கைத் தரம் இல்லாத பலரை புறக்கணிக்க நேர்ந்தது. இது தொடர்பாக பரவலாக ஆடசேபனைகள் தெரிவிக்கப்பட்டதன் காரணத்தால் அஸ்வஸ்மா என்றழைக்கப்படும் புதிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி கோர்p சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மில்லியன் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அரசு மீள் பரிசீலனை செய்ய இணைங்கியுள்ளது. அஸ்வஸ்மா போன்ற புதிய பாதுகாப்பு திட்டங்கள் மக்களின் பொருளாதார நிலை அடிப்படையில் குறிவைத்தது. தவறுதலாகக் கணிப்பீடு செய்வதற்கும், நியாயப்படுத்த முடியாத வகையில் நிராகரிப்பு செய்வதற்கும், ஊழலுக்கும், சமூக நம்பிக்கையினத்திற்கும் இடமளிக்க கூடியவை என கண்டிக்கப்பட்டது. 

ஆனி மாதத்தில் உள்ளக கடன்களை குறைக்கும் முயற்சியாக அரசு சாதாரண மக்களுடைய சேமிப்புக்கள் அரசினால் நடத்தப்படும் ஓய்வூதிய நிதியங்களின் பெறுமதியை குறைத்தது. 

பொறுப்புக்  கூறலும் நீதியும் 

தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு, (NURC)  புதியதொரு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கான திட்டங்களை யூன் மாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

1989 ம் ஆண்டு தெற்கில் நிகழ்ந்த இடதுசாரிகளின் கிளர்ச்சிகளை அடக்கி 30 வருடங்களிற்கு மேலாகியும் 2009 ம் ஆண்டு தமிழிழ விடுதலைப் புலிகள் (LTTE)  பிரிவினை வாத நிகழ்சிகள் தோற்கடிக்கப்பட்டு 14 வருட காலங்களில் நிகழ்ந்த உரிமை மீறல்களை பரிசீலனை செய்வதன் நோக்கத்திற்காகவே குறித்த ஆணைக்குழு நியமிக்க உத்தேசிக்கப்பட்டது. 

குறித்த விடயம் தொடர்பில் செயற்பட ஆரம்பிக்க முன் பாதிக்கப்பட்டவர்களின் குழுக்களுடனும் கலந்துரையாடமால் குறித்த புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதால் தாங்கள் பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள நல பாதிப்புக்கு இலக்காகக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளார்கள். 
அரசு தொடர்ந்து நடாத்தும் கடந்த காலத்தில் உரிமை பாதிப்புற்றோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும், சமூகத்தினருக்கும், தொடர்ந்து நடைபெறும் துஸ்பிரயோகங்கள் உத்தேச ஆணைக்குழுவின் இலக்குகளிற்கு முரணாக உள்ளதாக உள்ளது.  LTTE 

க்கு எதிரான யுத்தத்தின் போது நடைபெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் உண்மையை கண்டறிந்து பொறுப்புக்கூறல் கோரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறிப்பாக பொலிஸாரினாலும், புலனாய்வுப் பிரிவின் முகவர்களாலும் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். போர் காலத்தில் பாதிக்கப்பட்டு இறந்த தமிழர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற விடாது குழப்பப்பட்டன. 

தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் இவ் வகையான ஆணைக்குழுக்களை நியமித்து பாதிப்புற்றோர்களின் சாட்சிகளினதும் பெருமளவு சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டிருப்பினும் அவை எவற்றிலிருந்தும் பொறுப்பு கூறலோ அல்லது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்றோ கண்டு கொள்ள முடியாது போயுள்ளது. 

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாரிய துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஒரு சிலர் தொடர்பிலான குற்றவியல் புலனாய்வுகள் தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மூலம் சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு தொடரப்பட இருந்த வழக்குகளிற்கு குறித்த அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். 
வழக்கமாக தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவிலான புதைகுழிகளில் இறந்தவர்களை அடையாளம் காணவோ, அக் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களையோ கண்டு கொள்ள முறையான பரிசோதனைகள் நடைபெறவில்லை. 

காணாமல் போனவர்களைக் கண்டு கொள்வதற்கென 2017ம் ஆண்டு அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அவ்விடயம் தொடர்பில் கிட்டத்தட்ட எந்தவொரு முன்னேற்றமும் காட்டவில்லை. இவ் விடயம் தொடர்பில் ஏப்பிரல் மாத ஐ.நா மனித உரிமைகள் குழுவின் அறிக்கை அவ் அமைப்பின் முகவர்களாக கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஈடுபட்டதாக குற்;றம் சாட்டப்பட்ட நபர்களை நியமித்தது தொடர்பிலும், அப்படிப்பட்டவர்கள் அவ்விடயங்கள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டபொழுது தலையீடு செய்ததாக கருதப்பட்டவர்களை நியமித்தமை பற்றி கண்டனம் செய்துள்ளது. அவ்வகையில் குற்றம் புரிதலில் தொடர்புபட்டவர்கள் எனக் கருதப்படும்  சில அரச உத்தியோகஸ்தர்கள் அரசியல் ரீதியில் வலுவுள்ளவராகவோ அல்லது அரசின் கிழ் சிரேஸ்ட பதவிகளில் நியமிக்கப்பட்டவர்களகவே இருக்கினறனர். 

சிறுபான்மையினராக உள்ள தழிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களின் ஆதனங்களையும் புனித ஸ்தலங்களையும் அரச முகவர் அமைப்புக்கள் சட்ட விரேதமாக கைப்பற்றி உள்ளனர். கடந்த செப்ரம்பர் மாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒரு நீதவான் பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உயிர் அச்சுறுத்தலின் காரணமாக இது நடைபெறற்றுள்ளது. அவ் வகையில் அச்சுறுத்தல் நடைபெற்றது. தொல்பொருள் திணைக்களம் இந்து ஆலயம் ஒன்று இருந்த இடத்தில் பௌத்த மத அமைப்பொன்றினை நிர்மாணித்ததிற்கு எதிராக அந்நீதிபதி தீர்ப்பு அளித்ததன் நிமித்தமே.

2021ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் சபை எடுத்த தீர்மானம் ஒன்றுக்கமைய இலங்கையின் பொறுப்பு கூறுதலுக்கான செயற்திட்டம் ஒன்றினை நியமிப்பது என்ற தீர்மானம் ஒன்றினை எடுத்தது. இவ் அமைப்பு நியமிக்கப்பட்டது எதிர் காலத்தில் வழக்கு தொடர்வதற்கென இலங்கையில் நடைபெற்ற சர்வதேச குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்களை சேகரிப்பதற்கே இவ்வமைப்பு பணிபுரியும் காலம் 2024 புதுப்பிக்கப்பட உள்ளது. அவ்வாறு செய்து குறித்த சம்பவங்கள் தொடர்பில் சபை தகவல்கள் சேகரிப்பது தொடர வேண்டியதில்லை என்பதை காட்டும் உத்தேசத்துடனேயே ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தினால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று நியமிப்பது என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது. 

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் ஆணையாளரான பொல் கதுர்க் செப்ரம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்கா பற்றி குறிப்பிடுகையில் நிலைமாறுகால நீதிக்கான எந்தவொரு நடவடிக்கையையும் வெற்றியடைவதற்கு உண்மையைக் கணடறிதல் மட்டும் போதுமானதாக இராது. அத்துடன் பொறுப்பு கூறுதலுக்கான தெளிவான அர்ப்பணிப்புடனும்; பாரதூரமான மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் திடசங்கற்பமும் இருத்தல் வேண்டும் என கூறப்படுகின்றது. 

ஒன்று சேர்தலுக்கான சுதந்திரமும் கருத்து வெளிப்படுத்தலுக்கான சுதந்திரமும் 

அதிகாரிகள் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கேலிக் கூத்து செய்பவர் ஒருவர் ஐந்து கிழமைகளுக்கு முன்னர் சமய உணர்வுகளை புண்படுத்தக்கூடிய கருத்துக்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு ஐந்து கிழமைகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தது இதற்கு ஒரு உதாரணம் ஆகும். 

அரசு செப்ரம்பர் மாதத்தில் இணையவழி பாதுகாப்பு சட்டவாக்கம் ஒன்றினை வெளியிட்டது. அச்சட்டவாக்கத்தின் நோக்கம் உண்மைக்கு புறம்பானதும், அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதும், பரபரப்பை ஏற்படுத்தக் கூடியதும் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியதுமான வாக்கியங்களை இணையதளத்தில் தடுப்பதற்காகவாவது உள்ளது எனினும், செயற்பாட்டளர்களின் கருத்துப்படி இவை பேச்சு சுதந்திரத்தையேனும் வரையறுக்கும் என்று கூறினர். இச் சட்டவாக்கம், சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இணையவழி பாதுகாப்பு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படும் கூற்றுக்கள் உண்மையானவையா, தடைசெய்யப்பட வேண்டியவையா என அவ் ஆணைக்குழு தீர்மானித்து அவற்றை நீக்க கட்டளையிட்டு அவை தொடர்பில் புலனாய்வுகள் நடத்தப்பட்டு வழக்கு தொடரும் நடவடிக்கையில் குறித்த ஆணைக்குழு பங்களிக்க வழி வகுக்கும். 

ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை பற்றிய ஒரு அறிக்கையில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது. கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கும், கருத்தை கொண்டிருப்பதற்கான சுதந்திரமும் கடுமையாக வரையறுக்கப்படும். அத்துடன் பொலிஸார் அதிக வலுவுள்ள வகையிலான வன்முறையை பிரயோகித்து அமைதியான ஒன்று கூடலை கலைக்கும் அதிகாரமும் ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் மீது பயங்கரவாதத்தைத் தடுக்கும் சட்ட ஒழுங்குகளை பிரயோகிக்கவும் அரச கொள்ளைகளுக்கு எதிராக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் போது சமூக ஊடக அரங்குகளில் ஊடாக கருத்து தெரிவிக்கப்படுவதை தடை செய்யவும் வழிவகுக்கும் இவ் வகையான கருத்துக்களை வெளிப்படுத்துதல் ஒன்று கூடுதல் ஆகியவற்றிற்கான வரையறைகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் குறிப்பிட்டளவில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். 

அதிகாரிகள் அவர்களின் செயற்பாடுகளின் போது தொடர்ந்தும் சிவில் சமூக குழுக்களையும், செயற்பாட்டாளர்களையும் அவர்களுள் மனித உரிமை பாதுகாவலர் உட்பட இலக்காக்கப்பட்டனர். அவரது அறிக்கையில் தூர்க் அவர்கள்  எல்லாவகையான கண்காணிப்புக்களையும், துன்புறுத்தல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரியுள்ளார்.   

பயங்காரவாதத்திற்கு எதிரான சட்டங்கள்

தற்போது நடைமுறையில் உள்ள பயங்காரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் துஸ்பிரயோகம் செய்வது தொடர்பில் உள்ளகத்திலும் சர்வதேச மட்டத்திலும் முன்வைக்கப்பட்ட கண்டனங்களை கவனத்தில் எடுத்து, அரச உரிமைகளை கவனத்தில் எடுத்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் சட்டம் ஒன்றினை நிறைவேற்ற அரசாங்கம் உடன்பட்டது. இவ் விடயம் தொடர்பில் குறிப்பாக ஐரோப்பிய யூனியனும் அழுத்தங்களை கொடுத்தது. ஐரோப்பிய யூனியன் இவ்வகையின் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதில் இருந்து விலக்களித்தது அப்பிரதேசத்தில் பொருட்களை சந்தைப்படுத்த அனுமதித்திருந்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய யூனியன் GPS+ என்றழைக்கப்படும் சலுகைகளை இலங்கைக்கு அளித்திருந்தமை 2017 ம் ஆண்டு  EU ற்கு குறித்த சட்டத்தை நீக்குவது பற்றி  இணங்கி தற்சமயம் அதனை மீளாய்வு செய்ய அரசு நடவடிக்;கை எடுக்க முற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. 

எனினும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டவாக்கம் என அழைக்கப்படும் பிரேரிக்கப்பட்ட மாற்றுச் சட்டம் மக்களின் ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமைவதுடன் அச் சட்டம் சிறிலங்கா சர்வதேச அமைப்புக்கள் எதிர்பார்க்கும் கட்டுபாடுகளிற்கு அமைவாவதற்கு வெகு தொலைவில் உள்ளது. 

அரசு முதலில் புதிய சட்டம் மார்ச் மாதம் முன் வைக்கப்போவதாக கூறியது. எனினும் குறித்த சட்டவாக்கத்தில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினால் துஸ்பிரயோகிக்கப்பட்ட அனேக ஏற்பாடுகள்; குறித்த சட்டவாக்கத்தில் உள்ளாக்கப்பட்டுள்ளதாலும் அத்துடன் புதிய சட்டத்தில் துஸ்பிரயோகிக்க கூடிய புதிய ஏற்பாடுகளை கொண்டிருப்பதாலும் பரவலாக ஏற்பட்ட ஆட்சேபனைகளைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட புதிய சட்டம்  ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள எனக் கூறி வாபஸ் பெறப்பட்டது. குறித்த சட்டவாக்கம் செப்ரம்பர் மாதத்தில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சிறிதளவே மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. 

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டவாக்கத்தில் சில முன்னேற்றகரமான திருத்தங்கள் இருக்கின்ற போதிலும் வன்முறையற்ற ஆட்சேபனைகனை அல்லது செயற்பாடுகளை உள்ளடக்க கூடிய தெளிவற்ற வெளிப்படையான சொற்பிரயோகங்கள் சேர்க்கப்பட்ட போதிலும் குற்றம் எனும் பதம் நியாயப்படுத்தக் கூடிய வகையில் பயங்கரவாதத்தை தெளிவாக விளக்கவில்லை அர்த்தமுள்ள வகையிலான நீதித்துறையின் மேற்பார்வையின்றி ஐனாதிபதிக்கும், பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் ஆதாரமின்றி மக்களை தடுத்து வைக்கும் அதிகாரத்தினைக் கொடுப்பதுடன் தெளிவற்ற வகையில் பேச்சுகளிற்கு வியாக்கியனம் கொடுத்து அதனை ஒரு குற்றவியல் குற்றமற்றதாக்கவும்     தான்தோன்றித் தனமாக மக்களோ, அமைப்புக்கள் கூடுவதை தவிர்க்க இச் சட்டவாக்கம் வடிவமைக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது. இதற்கு முன்வைக்கப்பட்ட கண்டணங்களால் ஒக்ரோபர் மாதத்தில் வேறு திருத்தங்கள் செய்வதற்கென காட்டக் கூடிய வகையில் இச்சட்டவாக்கம் பராளுமன்றத்திலிருந்து மீளப் பெறப்பட்டது.

பெண்களினதும் பெண்பிள்ளைகளினதும் உரிமைகள் 

குறைந்த சம்பளத்துடனான அல்லது திடமான தொழில் இல்லாத பெண்களே அடிக்கடி பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்க நேருவது பெண்களிற்கே, அவர்கள் அதிகரித்து வரும் சுமைகளைத் தங்கள் வீட்டினுள்ளேயே எதிர்கொள்கின்றார்கள்.

முஸ்லிம் விவாகம் விவாகரத்து சட்டம் (MMDA) முஸ்லிம் சமூகத்தினரது விவாகம் தொடர்பான விடயங்களை நெறிப்படுத்தும் சட்டமாகும் அச்சட்டத்தில் பெண்களினதும் பெண்பிள்ளைகளினதும் உரிமைகளை மீறும் பல்வேறு ஏற்பாடுகள் உள்ளன. அவற்றுள் ஆகக் குறைந்த வயது எல்லை நிர்ணயிக்கப்படாது விவாகங்கள் நடைபெறுவதை அனுமதிப்பதும் அடங்கும் அச் சட்டத்தில் ஆண்கள் மாத்திரமே குவாசி என அழைக்கப்படும் குடும்ப நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஆக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஆண்கள் பெண்களை விட இலகுவில் விவாகரத்து பெற கூடியதாக உள்ளது. அத்துடன் ஒரு விவாகம் பதிவாவதற்கு முன்னர் ஒரு பெண் அல்லது ஒரு பெண்பிள்ளையினது அனுமதி பெறப்பட்டதாக பதிய வேண்டியது இல்லை.  MMDA க்கு அமைய இளவயதில் விவாகமான ஒரு பிள்ளை குற்றவியல் தண்டனைக்கோவையின் சட்டத்திற்கமைய கற்பழிப்பு எனக் குற்றம் சுமத்தக் கூடிய குற்றத்தை சுமத்தி நிவாரணம் பெற முடியாது. உலகத்திலே மிகவும் கடும் தன்மையுள்ள கருச்சிதைவு சட்டங்களை கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று, எல்லாவகையான கருச்சிதைவுகளை ஏற்படுத்தியவர்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனை விதிக்க கூடியதாக உள்ளது  எனினும், அத்தண்டனைக்கு விதி விலக்காக ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற கருச்சிதைவு செய்வது புறநீங்களாக உள்ளது. 

இலங்கையின் பாலியல் வன்முறைகள் பெண்களிற்கு எதிராக நடைபெறுவதையும் வேறு வன்முறைகள் நடைபெறுவது தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் குழு தொடர்ந்து தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் அரசியலில் குறைந்தளவில் பெண்கள் பிரதிநிதித்துவம் வழங்குவதையிட்டு வருத்தம் தெரிவித்துள்ளது. 

பாலியல் நாட்டமும் பாலின் அடையாளமும் 

இயற்கை ஒழுங்குக்கு முரணாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதும் பாரிய அநாகரீக பாலியல் செயல்களில் ஈடுபடுவதும் தண்டனைக் கோவையின் தடை செய்யப்பட்ட விடயங்கள் ஆகும். இது தொடர்பான ஏற்பாடுகள் இணக்கத்துடன் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் செயற்பாடுகளையும் குற்றவியல் செயற்பாடுகளாக குறித்த சட்ட ஏற்பாடுகளுள் இவை அடங்கும் என பரவலாக கருதப்படுகின்றது. குறித்த தண்டனைக் கோவையில் உள்ள இன்னுமொரு ஏற்பாடு பாலின மாற்றம் செய்து ஏமாற்றுவதை தடுக்கின்றது. இதனை பொலிஸார் பயன்படுத்தி திருநங்கையினை இலக்காக்கின்றனர். பாலியல் செயற்பாடுகளை தொழிலாக கொண்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண்களையும், திருநங்கைப் பெண்களையும் இலக்காக்குவதற்கு பெலிஸார் 1841ம் ஆண்டில் சுற்றித் திரிபவர் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் தெளிவற்ற ஏற்பாடுகளை பரந்தளவில் பயன்படுத்துகின்றனர்.

சமலிங்க நபர்கள் உடலுறவு கொள்வதை குற்றமற்ற செயலாக்குவதற்கென தனிநபர் சட்டவாக்கம் ஒன்று பராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது எனினும், இவ் அறிக்கை எழுதும் காலம் வரை சட்டவாக்கம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 

பிரதான சர்வதேச மட்டத்தில் செயற்பாட்டு நாடுகள் 

சிறிலங்கா சர்வதேச பிராந்தியத்தில் தொடர்பு கொள்ளும் நாடுகளுள் சீனாவிற்கும், அதுபோன்ற தரத்திலான வேறு நாடுகளுக்கும் இடையில் எதிர்த்து போட்டி போடும் நாடுகளின் அழுத்தங்கள் பகுதியளவில் சிறிலங்கா மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இவ்விடயம் தொடர்பான நாடுகளுள் இந்தியாவும், ஜக்கிய அமெரிக்க நாடுகளும், ஐப்பானும் அடங்குகின்றன. அவை அவுஸ்ரேலியா சேர்ந்து  QUAD என அழைக்கப்படும் நான்கு கரைப் பாதுகாப்பு அமைப்புக்கள் சீனா இலங்கைக்கு  அளிக்கும் பொருளாதார உதவிகளுக்கு மாற்றுச் செயற்பாடுகள் அளிக்கின்றன. இதனை வேறு நாடுகள் போட்டியிடும் நாடுகள் என்ற கோணத்தில் நாடுகள் பார்க்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைக்கு இலங்கையின் உற்பத்திக்கு வரி அறவிடாது சந்தைப்படுத்துவதற்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகையைப் பயன்படுத்தி ஐரோப்பிய யூனியன் இலங்கையின் மனித உரிமைகளின் மேம்பாட்டிற்கு  அழுத்தம் செலுத்தி வருகின்றது. இதற்கு GSP+ நிகழ்ச்சி என அழைக்கப்படுகிறது. இதனுடாக இலங்கை மனித உரிமை தொடர்பான பிரதான சமவாயத்தைப் நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கின்றது. 

பாரிய மனித உரிமை மீறல்களை கிரமமாக செய்வதில் தொடர்புபட்டவர்கள் என கருதப்படுபவர்களான இரண்டு முன்னாள் ஐனாதிபதிகளான மகிந்த ராஐபக்ஸ, கோத்தபாய ராஐபக்ஸ   என்ற சகோதரர்களுக்கும், முன்னாள் இராணுவ உத்தியோகஸ்தர்களுக்கும் எதிராக தடை உத்தரவுகளை  பிரகடனம் வழங்கி கனடா அரசாங்கம் ஒரு பாரிய நடவடிக்கையை எடுத்தது. இது போன்று ஐக்கிய அமெரிக்க நாடுகளும் சில இராணுவ உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக பிறப்பித்தது. வேறு நாடுகள் இவ்வாறு செய்யவில்லை. மனித உரிமைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கலாச்சாரமான சொற்பிரயோகங்கள் சர்வதேச அரங்குகளை நோக்கி இருந்தன எனினும்,  கூறப்பட்ட வகையில் மனித உரிமை மீறல்களை ஒழிப்பதற்கான செயற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. உத்தேச உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் விபரங்கள் அனைத்தையும் அரசு வெளிப்படுத்தவில்லை எனினும் அரச உத்தியோகஸ்தர்கள் அம் முயற்சிக்கு ஆதரவு வழங்கும்படி தென்ஆபிரிக்கா, சுவிர்ஸலாந்து, ஐப்பான் முதலிய நாடுகளில் இருந்தும் ஐ.நா சபையின் முகவர் அமைப்புக்களிலிருந்தும் ஆதரவு கோரியுள்ளார்கள். 

2021 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் 2024 ம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் புதுப்பிக்கப்படவுள்ளது. இத் தீர்மானம் கனடா, Nஐர்மனி, வடமசிடோனியா, மாலாவி, மொன்ரினிகுறோ, ஐக்கியராச்சியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் முதலிய நாடுகளைக் கொண்ட இணை நாடுகளினால் முன்வைக்கப்பட்ட ஒன்றாகும்.