Skip to main content

இலங்கை: ராஜபக்‌ஷே மரபுரிமை துஷ்பிரயோகம்

மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்கள், சர்வதேச விசாரணை 2014-க்கு எதிர்ப்பு

(நியூ யோர்க்) – இலங்கை அரசு, குறிப்பாக கடந்தகால போர்க் குற்றங்களுக்கு நீதி வேண்டுமென வலியுறுத்தும், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான நடவடிக்கைகளை 2014-இல் துரிதப்படுத்தியதாக மனித உரிமைகள் அவதானிப்பகம் இன்று வெளியிட்ட உலக அறிக்கை 2015 (World Report 2015)-இல் கூறியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதி இரணுவ நடவடிக்கைகளின் பின்னரிலிருந்து இடம்பெற்ற அடவடித்தனமான சிறையிலடைப்புக்கள், பலாத்காரமாக மேற்கொள்ளப்பட்ட காணாமல் போதல் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரணை செய்தல் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் அதிகாரத்திற்கு வந்த அரசு கட்டளையிடுதல் வேண்டும்.

உலக அறிக்கையின் 656- வது பக்கத்தில், தனது 25வது பதிப்பில், மனித உரிமைகள் அவதானிப்பகம் 90‑க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித உரிமை நடைமுறைகளை மீண்டும் பார்வையிடுகின்றது. தனது அறிமுக கட்டுரையில், நிர்வாக இயக்குனர் கென்னத் ரோத் (Kenneth Roth) கொந்தளிப்பான சமயங்களில் மனித உரிமைகள் ஒரு பயனுள்ள தார்மீக வழிகாட்டியை வழங்குவதையும், உரிமை மீறல்கள் தீவிரமான பாதுகாப்பு சவால்களை தூண்டக்கூடும் அல்லது மோசமடையச் செய்யக்கூடும் என்பதையும் கண்டுணர வேண்டுமென அரசாங்கத்தை நிர்பந்திக்கின்றார். சுதந்திரம் மற்றும் பாகுபாடின்மையின் அடிப்படை மதிப்புகளை வலுவிழக்கச் செய்யும் குறுகிய கால வருமானங்கள் அரிதாகவே நீண்ட காலத்துக்கு நற்பயன் விளைவிக்கின்றன.

உலக அறிக்கை தயார் செய்து முடிவடைந்த்தன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் சுதந்திரமான கருத்துச் சுதந்திரம் மற்றும் ஏனைய உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கியமான செயற்பாடுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டிருந்த இணைய தளங்கள் மீள சாதாரண நிலையில் இயங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது, ஊடகத் தடைகள் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளதுடன் 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட லசந்த விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளரின் படுகொலை தொடர்பாக மீண்டும் விசாரணை செய்வது தொடர்பாக கட்டளையிடப்பட்டுள்ளது. செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பாக உழவு பார்த்தல் மற்றும் அச்சுறுத்தல்களை திணித்தல் போன்றன நிறுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாத்தைத் தடை செய்யும் சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலொன்றை மீளாய்வு செய்யுமாறு அரசாங்கம் கோரிக்கை விட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டில் முடிவடைந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுடன் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக வகைகூறும் வாக்குறுதியை அமுல்படுத்துவதற்கு கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியுற்றமையின் காரணமாக, யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட வகுதியினர் இருசாராரினாலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேய சட்டத்தினை முழுமையாக மீறியமை தொடர்பாக விசாரணை செய்வதற்காக மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அலுவலகத்தின் செயலாளர் நாயகம் அதிகாரத்தை வழங்கி 2014 மார்ச் 27 ஆம் திகதி பிரேரணையொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இலங்கை அரசாங்கமானது உடனடியாக மார்ச் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரேரணையினை மறுதலித்ததுடன் அரசாங்கத்தின் சிரேட்ட அங்கத்தவர்கள் சிலர் ஐக்கிய நாடுகளின் விசாரணை தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குகின்ற நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் பணியாற்றுவதாகவும் வகை கூறல் மற்றும் நியாயத்தை நிலைநாட்டல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதிய அரசாங்கம் அறிக்கை விட்டுள்ளது.

“ஐ.நா. விசாரணை என்பது இலங்கையின் நீண்டகால சிவில் யுத்தத்தின் போது இரு பக்கங்களிலும் நிகழ்ந்த கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கானதொரு முதல் உண்மையான நம்பிக்கை ஆகும்”, என்றார் மனித உரிமைகள் அவதானிப்பகம் ஆசிய இயக்குநர் பிராற் ஆடம்ஸ் (Brad Adams). “ஐ.நா. விசாரணைக்கு இலங்கையின் புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதுடன் முன்னைய ஆக்கிரமிப்புக்களுக்கு முடிவு காண்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

வடமாகாணத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக தென் மாகாணத்தில் நடத்தப்பட்ட செயலமர்வுகள் பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக மூடப்பட்டு, பங்கு கொண்டவர்கள் வீட்டுக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டில், புத்த பெரும்பான்மையினரைச் சேர்ந்த கும்பலைத் தூண்டிவிட்டு தென் மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் நகரம் ஒன்றைத் தாக்கியதற்காக தேசியவாத புத்த நிறுவனங்கள் மத சிறுபான்மையினருக்கு கண்டனம் தெரிவித்தன, இத்தாக்குதலில் குறைந்தது நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், சுமார் 80 பேர் காயமடைந்தனர், அனேகமான முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமடைந்தன. அரசாங்கம் விரைந்து இந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்ததுடன் உடனடியாக சிலரைக் கைது செய்தாலும் கூட, இந்த வன்முறையைத் தூண்டி விட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

“யுத்தத்தின் பின்னரான வருடங்களில் ராஜபக்‌ஷே அரசின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பானது தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறை காரணமாக தீவிரமாக தடைப்பட்டது,” ஆடம்ஸ் கூறினார். “அனைவரின், குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக விமர்சிப்பவர்களின், நீதி மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கு புதிய இலங்கை அரசு இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.”

Your tax deductible gift can help stop human rights violations and save lives around the world.

Region / Country