Skip to main content

இலங்கை: ‘பால்நிலை தொடர்பான நெறிமுறைகளுக்கு’ சவால் விடுக்கும் காரணத்தினால் து~;பிரயோகம் நிகழ்கின்றது.

மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால்நிலை அங்கிகாரம் என்பவற்றைக் கொண்ட (டுபுடீவுஐ) நபர்களுக்கு எதிரான சட்டங்களை நீக்கவும், பால்நிலை அங்கீகாரக் கொள்கையை உருவாக்கவும்.

இலங்கையில் வசித்து வரும் (Transgender என அழைக்கப்படும்) திருனர்கள் சமூகத்தினரும், பால்நிலை தொடர்பான சமூக எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிவைக்காத ஏனையவர்களும் பால்நிலை அடிப்படையிலான பாரபட்சத்தை எதிர்கொண்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rigths Watch) இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
 
ஐந்து விரல்களும் ஒரே மாதிரியானவையாக இருப்பதில்லை: இலங்கையில் பால்நிலை அடையாளம் மற்றும் பாலீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரபட்சம்” என்ற தலைப்பிலான, ஓஓ பக்க அறிக்கை, பால்நிலை தொடர்பான நெறிமுறைகளுக்கு இணங்கி ஒழுகாத நபர்கள் தன்னிச்சையான தடுப்பு வைப்பு, துன்புறுத்தல் என்பவற்றை எதிர்கொண்டு வருவதாகவும், தொழில்; வீட்டு வசதி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு என்பவற்றை அணுகுவதில் பாரபட்சங்களை எதிர்கொண்டு வருவதாகவும் எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய தன்மையிலான பாரபட்சங்களை எதிர்கொண்டு வரும் திருனர் பிரிவைச் சேர்ந்த மக்களினதும், ஏனையவர்களினதும் உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்மென மனித உரிமைகள் காண்காணிப்பகத்தின் அந்த அறிக்கை வேண்டுகின்றது. 
 
கொழும்பைச் சேர்ந்த ஒரு திருனர் பெண்மணியான ச~pனி தான் வாழ்ந்து வரும் பால்நிலையை பிரதிபலிக்கக்கூடிய விதத்தில் தனக்கு உத்தியோகபூர்வமான ஆவணங்களை வழங்குவதன் மூலம் தன்னை ஒரு பெண்மணியாக அங்கீகரிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்ள வேண்மென மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளார். © 2016 சமந்தா

“இலங்கையர்கள் அனைவரும் அவர்களுடைய பால்நிலை அடையாளம் அல்லது பாலீர்ப்பு என்பன என்னவாக இருந்து வந்த போதிலும், பாரபட்சம் அல்லது து~;பிரயோகம் என்பன இல்லாத விதத்தில் தமது உரிமைகளை அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென” மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின்; நங்கை (Lesbian)இ நம்பி (Gay), ஈரர் (Bisexual) மற்றும் திருனர் (Transgender) ஆகியோரின் உரிமைகள் தொடர்பான குறூப்பர் ஆய்வாளரும்; அறிக்கையின் ஆசிரியருமான யுவராஜ் ஜோ~p கூறினார். “அரசாங்கம் இப்போது பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளத் தொடங்கியிருக்கும் அதே வேளையில், பால்நிலை அடையாளம் (புநனெநச ஐனநவெவைல) மற்றும் பாலீர்ப்பு (ளுநஒரயட ழுசநைவெயவழைn) என்பவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் சட்டங்கள் மற்றும் வழக்கங்கள் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு உடனடியாக அது முயற்சிக்க வேண்டும்”.

 
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் நான்கு நகரங்களைச் சேர்ந்த நங்கை, நம்பி, ஈரர், திருனர் மற்றும் இடைப் பால்நிலைத்தவர் (டுபுடீவுஐ) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 61 பேருடன் பேட்டி கண்டது. அவ்விதம் நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 16 பேர் பெரும்பாலும் திருனர்களாக அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களாக (ஆளுஆ) இருந்து வந்ததுடன்;; தாம் பொலிசாரினால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் து~;பிரயோகங்களை அனுபவித்திருப்பதாக அவர்கள் கூறினார்கள். இந்தக் குழுவில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் எத்தகைய காரணங்களும் இல்லாமல் குறைந்தது ஒரு தடவையாவது பொலிஸார் தம்மை தடுத்து வைத்திருந்ததாக குறிப்பிட்டார்கள். 

தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 365 மற்றும் 365 ஏ என்பவற்றின் கீழ், சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு பால் புணர்ச்சி செயற்பாடு குற்றச் செயலொன்றாக செயலாக்கப்பட்டுள்ளது. தெளிவற்ற சொற் பிரயோகங்களுடன் கூடிய அலைந்து திரிதல் தொடர்பான சட்டம் மற்றும் “ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் ஏமாற்றுவதற்கு” எதிரான சட்டம் என்பவற்றை உள்ளடக்கிய விதத்தில் ஏனைய சட்டங்களும் பால்நிலை அடையாளத்துடன் இணங்கி ஒழுகாத டுபுடீவுஐ ஆட்களை கைது செய்வதற்கென பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஒரு சில திருனர் பெண்களும், ஆண்களும் பொலிஸார் தம்மை மீண்டும் மீண்டும் துன்புறுத்தி வருவதாக குறிப்பிட்டார்கள். தன்னிச்சையான தடுப்பு வைப்பு மற்றும் துன்புறுத்தல் என்பவற்றையும் இவை உள்ளடக்குகின்றன. இச்செயற்பாடுகள் இலங்கை அதிகாரிகள் மீதான அவர்களுடைய நம்பிக்கையை இல்லாதொழித்திருப்பதுடன், குற்றச்செயல்கள் தொடர்பாக அவர்கள் முறைப்பாடு செய்வதற்கான சாத்தியப்பாட்டையும் இல்லாமல் செய்துள்ளது. 

 
“என்னைப் போன்ற ஒருவரை அவர்கள் பாதுகாக்க மாட்டார்கள்” என்கிறார் கொழும்பில் வசித்து வரும் 25 வயது திருனர் பெண்மணியான “பாத்திமா”. 2012 ஆம் ஆண்டில் காடையர்கள் தன்னை தாக்கிய சந்தர்ப்பத்தில் அவர் அது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை. 
 
திருனர் (வுசயளெபநனெநச) சமூகத்தினர் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளும் விடயத்திலும் பாரபட்சத்தை எதிர்கொண்டு வருகின்றார்கள். உளநோயாளிகள் என பட்டம் சூட்டப்படுதல், தேவையற்ற கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுதல்; மருத்துவ ஆளணியினரிடமிருந்து இரகசியத் தன்மையை பேணிக்கொள்ள முடியாத நிலை மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஒரு சில மருத்துவத்துறை அலுவலர்கள் விரும்பாதிருக்கும் நிலை பற்றியும் இது உள்ளடக்குகின்றது. “அவர்களுடைய வார்த்தைகள் ஊசிகளை பார்க்கவும் மிக மோசமாக எம்மை குத்துகின்றன” என திருனர் ஆண் ஒருவர் கூறினார். தன்னிடம் அநாவசியமாக தனிப்பட்ட கேள்விகளைக் கேட்ட அரசாங்க வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலைய ஊழியர்கள் தொடர்பாகவே அவர் அப்படிக் குறிப்பிட்டார். 
 
இத்தகைய து~;பிரயோகங்கள்; இழிவுபடுத்தாத விதத்தில் திருனர் பிரிவைச் சேர்ந்தவர்களின் பால்நிலை அடையாளத்தை அங்கீகரிக்கத் தவறும் ஒரு சட்டப் பின்புலத்தில் இடம்பெற்று வருகின்றன் இந்தச் சட்டப் பின்புலம் சம்மதத்துடன் செயற்படும் வயது வந்த நபரகள்; இருவருக்கிடையிலான பால்நிலை உறவினை ஒரு குற்றச்செயலாக கருதுகின்றது; அது அரச அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் டுபுடீவுஐ சமூகத்தை சேர்ந்த நபர்;களுக்கு எதிராக பரந்தளவிலான து~;பிரயோகங்களை மேற்கொள்வதற்கு அவர்களை இயலச் செய்து வருகின்றது.
 
“மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால்நிலை அங்கிகாரம் என்பவற்றைக் கொண்ட (டுபுடீவுஐ) சமூகத்தினருக்கு தம்மை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சட்டங்களே தேவைப்படுகின்றன. தமக்குத் தீமை விளைவிக்கும் சட்டங்கள் தேவையாக இருந்து வரவில்லை” என இலங்கையின் செயற்பாட்டாளரும்,; இலங்கை டுபுடீவுஐ சமூகத்தினரின் உரிமைகளுக்காக கருத்துக்களை முன்னெடுத்து வரும் கொழும்பை மையமாகக் கொண்ட (நுஙரயட புசழரனெ) அமைப்பின் ஸ்தாபகருமான ரோசன்ன பிளேமர் கல்தேரா கூறினார். “புதிய அரசாங்கம் பாரபட்சம் காட்டும் சட்டங்களை நீக்கி எமது மனித உரிமைகளை பாதுகாக்குமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எங்களுடன் வெளிப்படையான விதத்தில் உரையாடலில் ஈடுபடுமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்”.
 
இலங்கையின் தற்போதைய சட்டம், ஒருவரின் சட்டபூர்வமான பால்நிலையை மாற்றிக் கொள்வதற்கான ஒரு தெளிவான வழியை வழங்கவில்லையென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. திருனர் சமூகத்தை சேர்ந்த ஆட்கள் தாம் விரும்பும் பெயர் மற்றும் பால்நிலை என்பவற்றை பிரதிபலிக்கக் கூடிய தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ ஆவணங்கள் என்பவற்றை பெற்றுக் கொள்வதில் கடினங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். அது அவர்களை தொடர்ச்சியான விதத்திலும், இழிவுபடுத்தும் விதத்திலுமான ஒரு நுட்பமான பரிசோதனைக்கு உட்படுத்துகின்றது. 
 
ழும்பைச் சேர்ந்த 40 வயதான திருனர் ஆண் ஒருவரான “கிரு~;ணன்”, தொழிலுக்கான நேர்முகப் பரீட்சைகளின் போது தனது தகைமைகளை பற்றியல்லாமல், தனது பால்நிலைத்தைப் பற்றியதான கேள்வியே முதலாவது கேள்வியாக இருந்து வருகின்றது எனக் கூறினார். 
 
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படும் சுகாதார அமைச்சு, திருனர் சமூகத்தினர் உளநிலை மருத்துவர் ஒருவரின் பரிசோதனையின் பின்னர் ஆவணங்களில் தமது பால்நிலையை மாற்றிக் கொள்வதற்கான நடைமுறை ஒன்றை உத்தேசித்துள்ளது. அது முன்நோக்கிய ஒரு படியாக இருந்து வரும் அதே வேளையில் உளவியல் பரிசோதனை அல்லது மருத்துவ சிகிச்சைகள் அல்லது நடைமுறைகள் குறித்த தேவைகள் எவையுமின்றி, அனைத்து ஆட்களும் அனைத்து ஆவணங்களிலும் தமது சட்டபூர்வமான பால்நிலையை மாற்றிக்; கொள்வதற்கு அதிகாரிகள் இடமளிக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியது. 
 
வன்முறை, பாரபட்சம் மற்றும் தனியார் செயற்பாட்டாளர்களினாலும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் முகவர்கள் ஆகிய தரப்பினரினாலும் மேற்கொள்ளப்படும் ஏனைய வகையைச் சேர்ந்த து~;பிரயோகங்களுக்கு எதிராக தனிநபர்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டினை எடுத்து வரும் அடிப்படை சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்களை இலங்கை அத்தாட்சிப்படுத்தியுள்ளது. 
 
இலங்கையர்கள் அனைவரும் அவர்களுடைய பால்நிலை அடையாளம் அல்லது பாலீர்ப்பு என்பன என்னவாக இருந்து வந்த போதிலும், பாரபட்சம் அல்லது து~;பிரயோகம் என்பன இல்லாத விதத்தில் தமது உரிமைகளை அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென.
Yuvraj Joshi

LGBT rights fellow

திருனர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உத்தியோகபூர்வ ஆவணங்களில் தமது பால்நிலைத்தை மாற்றிக் கொள்வதற்கென எளிமையான மற்றும் அணுகத்தக்க ஒரு நடைமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தவறுதலானது அவர்களுடைய மனித உரிமைகளை மீறும் ஒரு செயலாக இருந்து வருகின்றது என்ற விடயம் அதிகாரித்தளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. யுனிசெப் தொடக்கம் உலக உணவு நிகழ்ச்சித்திட்டம் வரையிலான 12 ஐ நா முகவரகங்கள் 2015ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் அரசாங்கங்கள் பலவந்தமாக மலடாக்குதல் அல்லது சிகிச்சை அளித்தல் போன்ற “இழிவுபடுத்தக்கூடிய தேவைகள் எவற்றையும் முன்வைக்காத விதத்தில் திருனர் ஆட்களின் பால்நிலை அடையாளத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்படுவதனை” உத்தரவாதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்;டது. 

 
“திருனர்கள் எமது அடையாளங்களுக்கு பொருந்தாத ஒரு பால் அல்லது பால்நிலையை குறிப்பிடும் ஆவணங்களை எடுத்துச்செல்லும்பொழுது ஒவ்வொரு இடத்திலும் இடையூறுகளை சந்திக்கின்றார்கள்;” என பூமி ஹரேந்திரன் குறிப்பிட்டார். அவர்; திருனர் சமூகத்தின் உரிமைகளுக்கென கொழும்பிலிருந்து செயற்பட்டு வரும் ஒரு செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். “மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென எம்மிடம் கேட்டுக் கொள்ளாமல் இலங்கை அதிகாரிகள் எமது பால்நிலை அடையாளத்தை பிரதிபலிக்கும் ஆவணங்களை எமக்கு வழங்கினால் அந்தச் சிறு காகிதத் தாள்கள் எமது வாழ்க்கையில் கணிசமான அளவிலான மாற்றங்களை ஏற்படுத்த வரமுடியும்”.

Your tax deductible gift can help stop human rights violations and save lives around the world.

Region / Country
Topic

Most Viewed