Skip to main content

இலங்கை

Events of 2015

A Sri Lankan policeman keeps watch at a demonstration in the capital, Colombo, on August 14, 2014.   © 2014 Getty Images

Keynote

 
Afghan refugees in Greece
Twin Threats

How the Politics of Fear and the Crushing of Civil Society Imperil Global Rights

Essays

 
Thirteen-year-old Sifola in the home she shares with her husband and in-laws in Bangladesh. Sifola’s parents, struggling with poverty, took her out of school and arranged for her marriage so that the money saved could pay for her brothers’ schooling. © 20
Ending Child Marriage

Meeting the Global Development Goals’ Promise to Girls

 
Bhumika Shrestha, a transgender woman in Nepal, holds her citizenship certificate, which listed her as male in 2011. Nepal legally recognized a third gender category beginning in 2007, but it took Shrestha and other activists and transgender citizens unti
Rights in Transition

Making Legal Recognition for Transgender People a Global Priority

 
The door of a cell at Lusaka Central Prison. Children are routinely incarcerated in Zambia for minor offenses and frequently held together with adults, putting them at increased risk of sexual violence and other abuses. © 2010 João Silva
Children Behind Bars

The Global Overuse of Detention of Children



இலங்கையில் தேர்தல்களானவை அண்ணளவாக ஒரு தசாப்பத அதிகரித்த சர்வாதிகார ஆட்சிக்குப் பிற்பாடு பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்நுள்ளது. 2015 ஜனவரியில், 2006 இல் இருந்து அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அதிகாரமானது முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரி சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஐக்கிய எதிர்கட்சி முன்னணியிடம் தோல்வியடைந்தது. ஆகஸ்ட் மாதத்தில், பெரிய எதிர்கட்சியின் நீண்டகால தலைவராகிய ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரியாக தெரிவு செய்யப்பட்டார்.  

புதிய அரசாங்கமானது விரைவாக ஊடகங்கள் மீதும் சிவில் சமூகக் குழுக்கள் மீதுமான கண்காணிப்பு மற்றும் தணிக்கையை இல்லாதொழித்ததுடன் நிறைவேற்று அதிகாரங்களை வரையறுப்பதற்கான அரசியல் மறுசீரமைப்புக்கள் மீதும் கவனம் செலுத்தியதுடன், நீதித்துறையில் சுயாதீனத்தை நிலைநாட்டுவதற்கான படிநிலைகளையும் எடுத்தது. ராஜபக்ஷ அரசாங்கத்தின் முரண்படும் அணுகுமுறைக்கு எதிரான விதத்தில் இது புதிய மிகவும் திறந்த ரீதியான உரையாடல்களை சர்வதேச சமூகத்துடனும்  மனித உரிமைகள் நிறுவனங்களுடனும் ஆரம்பித்தன. எவ்வாறாயினும் அரசாங்கமானது பாதுகாப்பு படைகளின் துஷ்பிரயோகங்களுக்கான தண்டனையில் இருந்து தப்புதல், பொலிசாரின் சித்திரவதை பயன்படுத்துகை உட்பட்டவற்றையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான எந்த கணிசமான ஏற்பாடுகளையும் எடுக்கவில்லை. இதனை எழுதும் நேரத்திலும் அரசாங்கமானது, கடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு அது பல வாக்குறுதிகளை அளித்திருந்தபோதிலும் இன்னும் அதைச் செய்யாதிருப்பதுடன் அதன் கீழ் தடுத்து வைப்புக்களையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 200 பேர் ஆக மதிப்பிடப்பட்ட பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்திருப்போரின் நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து, அரசாங்கமானது நவம்பரில் சிலரை பிணையில் விடுவித்ததுடன் வேறும் சிலரை புனர்வாழ்வுக்கு அனுப்பியதுடன் மிகுதியானோரை குற்றம் சாட்டி அனுப்புவதற்கு வாக்குறுதியளித்திருந்தது.
இலங்கையில் பிரிவினைவாத எல்ரிரிஈயினருடனான 1983 - 2009 ஆயுத முரண்பாட்டின்பொழுது எல்லாத் தரப்பினராலும் இழைக்கப்பட்;ட துஷ்பிரயோகங்கள் மீதான ஒரு கண்டன அறிக்கையானது மனித உரிமைகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தால் (ழுர்ஊர்சு)  ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்டது. இலங்கை மீதான தீர்மானமாக 2014 மார்ச் மனித உரிமைகள் சபையினால் ஆணை வழங்கப்பட்ட இவ் அறிக்கையானது சட்டத்திற்கு மாறான தாக்குதல்கள், கொலைகள், காணமலாக்கச் செய்யப்பட்டவைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், மனிதநேய உதவிகள்; மீதான தாக்குதல்கள் தொடர்பானவற்றின் நம்பத்தகுந்த விடயங்களை ஆவணப்படுத்தியுள்ளது.

அறிக்கையைத் தொடர்ந்து மனித உரிமை சபை உறுப்புரிமை நாடுகளானவை, அறிக்கையின் பல சிபார்சுகளை, குற்றம்சாட்டப்பட்ட யுத்தநேர துஷ்பிரயோகங்களை விசாரித்து தண்டனை வழங்குவதற்கான ஒரு விசேட சபையை உருவாக்குதல் உட்பட, ஒரு இலங்கை நியாயசபையில் வெளிநாட்டு நீதிபதிகளையும் சட்டத்தரணிகளையும் உள்ளடக்குவது என்பவற்றை அமுல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளது.  

அரசாங்கமானது முரண்பாட்டின் பொழுதான பாரதூரமான மனித உரிமை மீறல்களின் சில அடையாள ரீதியான சம்பவங்களையும், ஊடகவியலாளர்கள் காணாமற்போகச் செய்யப்பட்டமைகள், கொலைகள் உட்பட்டவற்றையும் விசாரிப்பதற்கு ஆரம்பித்துள்ளது.


அரசியல் அமைப்பு மறுசீரமைப்புக்கள்

ஜுன் மாதத்தில் புதிய அரசாங்கமானது அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தைக் கொண்டு வந்தது. இது நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீதான புதிய பரிசீலிப்புக்களை ஏற்படுத்தியதுடன், பொலிஸ், நீதித்துறை, மனித உரிமைகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பேணுவதையும் நாடி நிற்கிறது. திருத்தங்களானவை ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட நிலையை அடையாதிருந்தபொழுதிலும் இது ஜனாதிபதியின் ஆட்சிக்காலப்பகுதியினை, வரையறுப்பதுடன் பிரதம மந்திரியின் அதிகாரங்களை அதிகரிக்கிறது. செப்ரெம்பரில் அரசாங்கமானது சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதை மேற்பார்வை செய்யும் ஒரு அரசியலமைப்பு சபையை நிறுவ இருப்பதாக அறிவித்தது. நீண்டகால மனித உரிமைகள் வழக்குரைஞர்கள் ராஜபக்ஷ ஆண்டுகளில் இறக்கும் தறுவாயில் இருந்த ஒரு அமைப்பாகிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டனர்.

தேர்தல் மறுசீரமைப்புக்கள் மற்றும் அதிகாரப்பகிர்வுகள் மீதான மேலதிக அரசியலமைப்பு மற்றும் சட்டவாக்க மாற்றங்களை தேடி நிற்பதற்கு அரசாங்கம் உறுதியளித்தள்ளது.  

 

கடந்தகால துஷ்பிரயோகங்களுக்கான பொறுப்புக் கூறுகை
2014 மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தினால் ஆணை வழங்கப்பட்டவாறாக ழுர்ஊர்சு ஆனது செப்ரெம்பரில் பொதுமக்கள் மீதான, சட்டத்திற்கு மாறான தாக்குதல்கள், கொலைகள், காணாமலாக்கச் செய்யப்பட்டவைகள், பாலியல் வன்புணர்வுகள் மற்றும் பாலியல் வன்முறைகள் சிறுவர்களின் கட்டாய ஆட்சேர்ப்புக்கள், மனிதநேய உதவிகள் மீதான நோக்கம் கொண்ட மறுப்புக்கள், அரசாங்கம் மற்றும் எல்ரிரிஈயினரின் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான ஏனைய வன்முறைகள் போன்ற விசாரணைக் குற்றச்சாட்டுக்களின் அதன் அறிக்கையை வெளியிட்டது.

இவ் அறிக்கையானது பாரதூரமான மீறுகைகளை ஆவணப்படுத்தியதுள்ளதுடன் உள்ளுர் மற்றும் சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் என்போரை உள்ளடக்கி ஒரு கலப்பு நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கும், யுத்தக் குற்றங்களை, மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களை, இனக்கொலை, மற்றும் வரையறைகளின் ஒரு நியாயதிக்கம் இல்லாத காணாமலாக்கச் செய்யப்பட்டவைகளின், சட்டவாக்க குற்றமயப்படுத்தல்களை கைக்கொள்வதற்கும், பொறுப்புக்கான ஒரு வழிவகையாக ஆணைப்பொறுப்பு சட்டமாக்குவதற்கும், ஒரு  நீதி கலப்பு பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கத்தி;ற்கு; அழைப்பு விடுத்தது.

ழுர்ஊர்சு அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் சபையானது இலங்கையின் தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கையுடன் ஒரு சுயாதீனமான இலங்கை விசாரிப்பு மற்றும் வழக்காட்டல் அமைப்புடன், சர்வதேச நீதிபதிகள், வழக்காடுனர்கள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களையும் ஒருங்கிணைத்து ஒரு விசேட நீதிமன்றத்தை நிறுவதற்கு சிபார்சு செய்த ஒரு இணக்கத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இவ் அமைப்பின் விபரங்களை செயலாற்றுவதற்கு, நியாயசபையின் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்காடுனரின் எண்ணிக்கை வகிபங்கு உட்பட்டவற்றை செயல்படுத்துவதற்கு அவ் அமைப்பின் விபரங்களை செயற்படுத்துவதினை, தீர்மானமானது இலங்கை அரசாங்கத்திடம் விட்டு விட்டது. ஆகவே அரசாங்கமானது இது மீதான அவர்களது உள்ளீடுகளுக்காக நாடுபூராகவும் இருந்தான சிவில் சமூக குழுக்களுக்கும், உண்மை மற்றும் மீளிணக்கத்தை அங்கீகரிக்கும் ஆணைக்குழவின் தீர்மானத்திற்குமாக திரும்பிக் கொண்டது.

இலங்கை அரசாங்கமானது தீர்மானத்தின் ஊடாக நாட்டின் மனித உரிமைகள் நிலைமைகளை முன்னேற்றுவதற்காக பல சிபார்சுகளை ஏற்றுக்கொண்டதுடன், பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை இல்லாதொழிப்பது உட்பட சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு சட்டத்தின் மறுசீரமைப்புக்கள் உட்பட்டவற்றையும் ஏற்றுக்கொண்டது. காணிகளை அவற்றுக்குரிய சிவில் உரிமையாளர்களுக்கு திருப்பிக் கொடுத்தல், நாட்டின் வடக்கு கிழக்கில் பொது மக்கள் செயற்பாட்டில் இராணுவ ஈடுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல், சிவில் சமூக மற்றும் ஊடக மத சிறுபான்மை உறுப்பினர்கள் மீது மேற்கொண்டதாக சொல்லப்படும் தாக்குதல்களை விசாரித்தல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மீதான ஒரு தீர்வை எட்டுதல், என்பவற்றை துரிதப்படுத்துவதற்கும் அரசாங்கம் இணங்கியது. தீர்மானத்தின் சில முக்கிய பொறுப்பெடுப்புக்களில் காணாமற்போகச் செய்யப்பட்டவைகள் தொடர்பான ஒரு அர்ப்பணிக்கப்பட்ட நிறுவகத்தை நிறுவுதுல், உண்மை நீதி மற்றும் ஆணைக்குழுவை நிறுவுதல், நட்டஈடுகள் தொடர்பான ஒரு அலுவலகத்தை நிறுவுதல் என்பன உள்ளடங்குகின்றன. மனித உரிமை மீறுகைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளின் இரு தொகுதிகளை அரசாங்கமானது வெளியிட்டுள்ளது. அவைகள் பூர்த்தி செய்யப்பட்ட ஆனால் 2009 மேயில் பகிரங்கப்படுத்தப்படாத அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளன.

நவம்பர் மாதத்தில் அரசாங்கமானது இவ் அலுவலகங்களின் நிறுவுவதை நோக்கிய ஒரு ஆரம்ப படிநிலையாக நாடுபூராகவும் பொதுக் கலந்தாலோசிப்புக்களைத் திட்டமிட தொடங்கியது.

நவம்பர் மாதத்தில் ஐநாவின் கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் விருப்பத்திற்கு மாறான காணாமல் செய்யப்படுபவைகளின் ஐநா செயற்குழுவானது அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்தது. காணாமல் செய்யப்படுகைகள் மீதான அநேகமாக முற்று முழுதான பொறுப்புக்கூறல் இன்மையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிக்கொணர்வதற்கான நீடித்த முயற்சியின்மையையும் குழு அவதானித்தது. சுற்றுலாவின்பொழுது தம்மால் சந்திக்கப்பட்ட மக்களில் சிலர், அவர்களின் விஜயத்தை பின்னர் பாதுகாப்பு படை உறுப்பினர்களினால், குழுவினருடனான அவர்களது கூட்டங்கள் குறித்து கேள்விக்கு உட்படுத்தப்பட்டது குறித்துக் குழுவானது கவலை வெளியிட்டுள்ளது.

மே மாதத்தில் அரசாங்கமானது சிவில் யுத்தத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளின்பொழுது இராணுவத்தின் 57வது பிரிவை வழிநடாத்திய ஜகத் டயஸ் எனப்படும் பாரதூரமான மனித உரிமைகள் துஷ்பிரயோகங்களில் சொல்லப்பட்ட 57வது பிரிவின் சிரேஷ்ட உத்தியோகத்தராக இருந்தவரை இராணுவத் தளபதியாக அரசாங்கம் நியமித்தமையானது புதிய அரசாங்கம் ஆனது அதற்கு முந்திய அரசாங்கத்தைப் போன்று பொறுப்புக்கூறலில் இருந்து சிரேஷ்ட இராணுவ ஆட்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற கவலைகளை உருவாக்கியது.



பொலிஸ் சித்திரவதை மற்றும் - பிழையான நடத்துகை
ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசாரணைக்கு எடுத்துச் சொல்லப்படும் தனிநபர்கள் இலங்கைப் பொலிசாரினால் கிரமமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் பிழையான நடத்துகைக்கு உட்படுத்தப்படுவதும் தொடருகிறது. ஆனாலும்; தனிப்பட்ட பூசல்கள் அல்லது கப்பம் பெற்றுக்கொள்வதற்காகவும் இது இடம்பெறுகிறது. இலங்கைச் சட்டவாக்கமானது சித்திரவதையைத் தடைசெய்யும் அதேவேளையில் அரசாங்கமானது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் மேலதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று அல்லது குற்றவியல் வழக்குத் தொடர்வுகளை உறுதிப்படுத்துவதற்கு தவறிவிட்டது. பல குற்றம் சாட்டப்பட்ட குற்றமிழைத்தவர்கள், தொடர்ந்தும் கடமையில் இருப்பதுடனோ அல்லது மற்றுமொரு பொலிஸ்நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுமோ உள்ளனர். சொற்பளவான குறிப்பான சக்திவாய்ந்த சம்பவங்களாகிய ஊடகங்களில் எடுத்துக் காட்டப்படுபவைகளில் மாத்திரம் பாரதூரமான நடவடிக்கைகள் குற்றமிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்படுகிறது. அந்தச் சம்பவங்களில் கூட மேலதிகாரிகள் ஆணைப் பொறுப்புடையவர்கள் என்ற வகையில் பொறுப்பெடுத்துக்கொள்வதில்லை.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பரிகாரத்திற்கும் நீதிக்குமான கடுமையான பாதையினையே எதிர்கொள்கின்றனர். குறைந்த வசதியுடையவர்கள் குறிப்பாக கிராமிய சனசமூகத்தை சார்ந்தவர்களின், அநேகமாக வேறுபட்ட செயன்முறை படிநிலைகளானவை பெருத்தெடுப்பானதும் தடுக்கப்படக்கூடிய செலவீனமுடையதாகவும் இருக்கக் கண்டுகொள்கின்றனர். அவர்கள் தம் கிராமத்திற்கு திரும்பிவரும்பொழுது பொலிசாரின் தொடரும் தொந்தரவு குறித்து பலர் அறிக்கையிட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டமும் அரசியல் ரீதியாக உந்தப்பட்ட சித்திரவதையும்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்து இல்லாதொழிப்பதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் இணங்கியுள்ளது. அவ்வாறு சொன்னபோதிலும் புதிய பயங்கரவாத சட்டவாக்கத்திற்கான சட்டத்திளை அதற்குப் பதிலாக அது வைக்கும். பயங்கரவாத தடுப்புச்சட்டமானது எல்ரிரிஈ சந்தேக நபர்களையும் ஏனையோர்களையும் குற்றச்சாட்டோ அல்லது வழக்கோ அன்றி பல ஆண்டுகளாக தடுத்து வைத்திருப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. எல்லா தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்து அவர்களது உறவினருக்கு அறியச் செய்வதற்காக பல உறுதிமொழிகள் அளிக்கப்பட்டு இருப்பினும் பல குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் அல்லது உண்மையில் அவர்களது அன்புக்குரியவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து தகவல்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாத தடுப்புச்சட்டமானது, குறித்துரைக்கப்படாத சட்டத்திற்கு மாறான செயற்பாடுகளுக்காக, பிடியாணை எதுவும் இன்றி கைது செய்யப்படுவதற்கு அனுமதிப்பதுடன் சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தாது 18 மாதங்கள் வரையும் தடுத்து வைப்பதற்கும் அனுமதிக்கிறது. அரசாங்கமானது அவ்ஆளிடம் ஒரு குற்றம் சாட்ட வேண்டிய தேவையுள்ளது. பல பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் குற்றச்சாட்டு எதுவும் இன்றி பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இச்சட்டமானது சித்திரவதை போன்ற பிழையான செயற்பாடுகளை செய்யக்கூடிய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு, சட்டவாக்கத்தின் கீழ் வழக்கு இழுப்பதிலிருந்து விடுபாட்டு உரிமையையும் இச்சட்டம் வழங்குகிறது.

பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த வருடங்களிலே ஆயிரக்கணக்கான துஷ்பிரயோகங்களை வசதிப்படுத்தியிருந்தது. ஒப்புதல் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்வதற்கான சித்திரவதைகள் காணாமற்போகச் செய்கைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் என்பன உட்பட்டவற்றை வசதிப்படுத்தியிருந்தது. இச்சட்டமானது யுத்தம் முடிவுற்ற காலப்பகுதியில் இருந்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உட்பட, எல்ரிரிஈயுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள், கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்ட புகலிடம் தேடுபவர்கள், உட்பட்டோரை தடுத்து வைப்பதற்கும் சித்திரவதை செய்வது உட்பட்டவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது. சித்திரவதை, பாலியல் வன்முறைகள், ஏனைய பிழையான நடத்துகைகள் என்பவை குற்றவியல் விசாரணைப் பிரிவு மற்றும்  பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு அலுவலகங்களிலும் அதேவேளையில் வேறு சில தடுத்து வைக்கப்படும் உத்தியோகபூர்வமற்ற ஏனைய இடங்களிலும் இடம்பெற்றுள்ளது:.

நவம்பரில் அரசாங்கமானது பயங்கரவாத தடுப்புச்சட்டமானது (Pவுயு) யின் கீழ் தடுது;து வைக்கப்பட்டுள்ள தமிழ் தடுத்து வைத்திருப்பவர்களுடன் ஈடுபடுவதற்கான ஒரு திட்டத்தை அறிவித்தது. அதனை நடத்திக் கொண்டிருக்கும்பொழுது 39 தடுத்து வைத்திருப்பவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 99 பேர் புனர்வாழ்வு அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டத்தின் உண்மையான வரையறைகள் தெளிவுபடுத்தப்படாதவையாகவே உள்ளன. அரசாங்கமானது ஏனையோரை வழக்குக்கு அழைக்க முயற்சிப்பதற்கு வாக்குறுதி அளித்துள்ளது. ஒக்ரோபரில் அரசாங்;கமானது காணாமற்போனோரின் குடும்பத்திற்கு அவர்களின் நிலையை, இறந்துபோனவர்கள் என்பதற்குப் பதிலாக காணாமற்போனவர்கள் என்ற நிலையை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ சான்றுப்பத்திரங்களை வழங்குவதற்கு தீர்மானித்து இருந்தது. இது குடும்பத்தினருக்கு சில நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கும் அதேவேளையில், குடும்பத்தினரின் உணர்வுபூர்வமான தேவைகளுக்கும், இச்சம்பவங்கள் தொடர்பான ஒரு தொடர்ச்சியான விசாரணைகளுக்கான தேவைக்கும் மிகவும் கூருணர்வு மிக்கதாக இருக்கிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள்

ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று இருப்பதுடன் அதிலும் பலர் புலம்பெயர்வு வட்டத்தின்; ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்சேர்ப்பிலிருந்து, இடம்மாறுதல், வேலைவாய்ப்பு, திரும்பிவருதல், மீள இணைதல் ஆகிய ஒவ்வொரு கட்டத்திலும் துஷ்பிரயோகத்திற்கான இடரில் உள்ளனர். இலங்கை புலம்பெயர்வோரில் மூன்றிலொரு பங்கிற்கு அதிகமானவர்கள் வீட்டு பணிhயளர்களாகவும் அநேகமானோர் பிரத்தியேகமாக பெண்களாகவும் உள்ளனர். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சில படிநிலைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. ஆனாலும் அவர்களில் பலர் சிறிதளவு ஓய்வுடன் நீண்ட மணித்தியால வேலை, தாமதிக்கப்பட்ட அல்லது செலுத்தப்படாத ஊதியம் அல்லது வேலையிடத்தில் அடைக்கப்படுதல் வாய்வழி ரீதியான உடல் ரீதியான பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் என்பவற்றை தொடர்ந்தும் எதிர்கொண்டு வந்துள்ளனர்.

பாலியல் திசைமுகப்படுத்தல் மற்றும் பால்நிலை அடையாளம்

இயற்கைக்கு மாறான முழுமையான பாலியல் இழிவுச்செயல் செயற்பாடுகள் மற்றும் ஆள்மாறாட்டத்தினால் பொதுமக்களை ஏமாற்றுதல் என்பவற்றை குற்றமயப்படுத்துகிறது. டுபுடீவு ஆட்களை இலக்கு வைப்பதற்காக தெளிவற்று வரைவிலக்கணம் செய்யப்பட்ட நாடோடிகள் தடுப்பு போன்ற ஏனைய சட்டங்களையும் இவற்றையும் பொலிசார் பயன்படுத்துகின்றனர். 2014 ஆம் ஆண்டு,; ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்கள், அரசியலமைப்பின் சம பாதுகாப்பு சரத்தானது பாலியல் திசைமுகப்படுத்தல் மற்றும் பால்நிலை அடையாளத்துவம் என்பவற்றின் அடிப்படையிலான மனவடு மற்றும் பாரபட்சத்திலிருந்து ஆட்களை பாதுகாக்கிறது எனக் கூறினர். ஆனாலும் அரசியலமைப்போ அல்லது ஏனைய வேறு சட்டங்களோ அவ் அடிப்படைகளில் பாரபட்சத்தை வெளிப்படையாக தடைசெய்யவில்லை

முக்கிய சர்வதேச செயற்பாட்டாளர்கள்
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபையானது, ஒரு இணக்கமான தீர்மானத்தை கைக்கொண்டு ஒரு நம்பத்தகுந்த பொறுப்புக்கூறல் செயன்முறையை பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குதொடுனர்கள் விசாரணையாளர்களின் ஈடுபாட்டுடன் அமைப்பதற்கு இலங்கைக்கு ஒக்ரோபரில் அழைப்பு விடுத்தது. ஐக்கிய அரசுகள், ஐக்கிய இராச்சியம், மசிடோனியா, மொன்ரெனோகுறோ மற்றும் அவுஸ்திரேலியா என இன்னும் பல இத் தீர்மானத்திற்கு அனுசரணை செய்திருந்தன.

இது இணக்கத்தின் மூலம் கைக்கொள்ளப்பட்டமையினால் இத் தீர்மானமானது முன்னைய தீர்மானத்தை மார்ச்சில் ஆதரவளிக்காத முக்கிய அரசுகளின் குழுவையும் குறிப்பிடத்தக்க முறையில் இந்தியாவையும் இத் தீர்மானத்திற்கு கொண்டு வந்திருந்தன. எவ்வாறாயினும் தீர்மானத்தின் சட்ட திட்டங்களின் அமுல்படுத்தலினை சர்வதேச ரீதியாக மேற்பார்வை செய்வதற்கான  உரிய ஏற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு, அனுசரணை அரசுகள் தவறுவது குறித்து அக்கறைகள் தொடர்ந்துள்ளன. தீர்மானமானது 2016 ஜுனில் சபையின் 32வது அமர்வின்பொழுது உயர்ஸ்தானிகரிடமிருந்தான ஒரு வாய்வழியான இற்றைப்படுத்தலுக்கு மாத்திரம் அழைப்பு விடுத்ததுடன், 2017 மார்ச்சில் 34வது அமர்வின்பொழுது அறிக்கை அமுல்படுத்தலின் ஒரு எழுத்து மூலமான அமுல்படுத்தல் அறிக்கைக்கு அழைப்பு விடுத்தது. ஐக்கிய அரசுகள் மற்றும் ஏனைய அனுசரணையாளர்கள் ஒரு பெரும்பான்மையான நீதிப் பிரசன்னம் மற்றும் ஆணைப்பொறுப்பு என்பவற்றைக் கொண்டிருத்தல் போன்ற சில முக்கியமான விடயங்கள் தொடர்பானவற்றில் மொழியை உள்ளடக்குவதில் இருந்து பின்வாங்குகின்றனர்.