2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டு ஆயுதப் போராட்டத்தின் போது இரு தரப்புகளும் செய்த குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவது குறித்து அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது இலங்கை அரசாங்கம் தவறி உள்ளதோடு2012ஆம் ஆண்டிலும் தொடர்ந்துஜனநாயகத்திற்கானதாக்குதலை நடத்தி வருகின்றது.
தனது அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் என்பவற்றைப் பிரயோகித்து பொது மக்களை இலக்கு வைக்கின்றதோடு மக்களின் செயற்பாடுகள் மற்றும் பேச்சுச் சுதந்திரம் என்பவற்றையும் நசுக்கிவருகின்றது. யுத்த காலத்தில் நிகழ்ந்த துஷ்பிரயோகங்கள் பற்றிப் பொறுப்புக் கூறுமாறு அழைப்பு விடுத்த அல்லது அரசாங்கத்தின் ஏனைய கொள்கைகளை விமர்ச்சித்த மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முனைந்த நபர்களை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் அதே நேரம் அரச கட்டுப்பாட்டு ஊடகங்கள் ஆகிய தரப்புகள் பெயர் குறிப்பிட்டு அச்சுறுத்தல்களை விடுத்தன. உள்நாட்டு செயற்பாட்டாளர்கள்தங்களினதும் தாம் உதவி செய்கின்ற மக்களினதும் பாதுகாப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
பல வகையான சட்டங்களினதும் ஒழுங்குவிதிகளினதும் பிடியில் அதிகளவில் பரந்த தடுத்து வைத்தல் அதிகாரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எந்தவிதமான குற்றங்கள் அல்லது விசாரணைகள் இன்றி பல ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப் பட்டிருக்கின்றனர். தோல்வியைத் தழுவிய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (Tigers of Tamil Eelam) (எல்டிடிஈ)(LTTE)தெளிவான முறையில் சம்பந்தமில்லாத வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழர்கள் அடங்கலாக சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக அரச பாதுகாப்புப் படைகள் தன்னிச்சையான கைதுகளையும் துன்புறுத்தல்களையும் செய்து வருகின்றன. வட பகுதியில் வசித்த தமிழ் மக்கள் தமது பகுதிகளுக்குச் செல்லுவதற்கு மனிதாபிமானக் குழுக்களிடமிருந்து உதவிகளைப் பெற்றனர். ஆனாலும், அரசாங்கம் அந்த மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளமைப்புக்கான போதிய நடவடிக்கைகள் எதனையும் இது வரை எடுக்கவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் (Mahinda Rajapaksa) மற்றும் அவரது சகோதர்களும் ஜனநாயக நிறுவனங்களின் போர்வையில் அதிகாரத்தத்துவங்களைத் திரட்டுவதற்கு முனைந்து வருகின்றனர். தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும் (National Human Rights Commission(NHRC))மற்றும் ஏனைய அரசாங்க ஆணைக்குழுக்களினதும் சுயாதீனத்துவத்தை நிலைநாட்டும் நிமித்தம் விடுக்கப் பட்ட கோரிக்கைகளை ராஜபக்ஷ (Rajapaksa)அவர்கள் பாராதீனப்படுத்திவிட்டு 2010ஆம் ஆண்டில் நிறைவேற்றிய அரசியலமைப்புக்கான பதினெட்டாவது திருத்த சட்ட மூலத்தை கொண்டு ஓரங்கட்டிவிட்டார்.
பொறுப்புக்கூறுதல்
அரசாங்கத்திற்கும் எல்டிடிஈ (LTTE) தரப்புக்கும் இடையில் நிலவிய 26வருட கால யுத்தத்தின் போது இரு தரப்புகளும் புரிந்த பல விதமான மனித உரிமை மீறல்கள், யுத்தம் சார்ந்த சட்ட திட்டங்களை மீறிய யுத்த வன்முறைகள் ஆகியன தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு 2012ஆம் ஆண்டில் இலங்கை முன்னேற்றகரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை. 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுக்கு வந்த கடைசி மாதங்களின் போது எல்டிடிஈ (LTTE) தரப்பு பொதுமக்களை “மனிதக் கேடயங்களாக”பயன்படுத்தியதும், அரசாங்கம் கண்மூடித்தனமாக குண்டுகளைப் பொழிந்ததும் இத்தகைய வன்முறைகளில் உள்ளடங்கும்
குழுவின் சிபாரிசுகளை அரசாங்கம் செயற்படுத்துவதையும், ஒரு சுயாதீன விசாரணையை மேற்கொள்ளுவதையும், ஆதாரமான சான்றுகளைச் சேகரித்து அத்தகைய சான்றுகளைப் பாதுகாப்பதற்காக சுயாதீன சர்வதேச பொறிமுறை ஒன்றினை தாபித்தல் வேண்டும் என்பதைப் பரிந்துரைத்த ஐக்கிய நாடுகள் பொதுசெயலாளர் நாயகம் பான் கீ-மூன் (Ban Ki-moon)அவர்கள் நியமித்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் 2011ஆம் ஆண்டு அறிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் பாராதீனப்படுத்தி வருகின்றது.
அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக் குழு (LLRC)சர்வதேச சட்ட திட்டங்களை மீறிய கடும் குற்றங்களை போதியளவு அடையாளப்படுத்தத் தவறியதையும், நீதியையும் வகைகூறும் பொறுப்பையும் உறுதிசெய்வதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இலங்கைக்கு அழைப்பு விடுக்கத் தவறியதையும் கண்டறிந்த ஐ.நா மனித உரிமைகள் சபை (Human Rights Council (HRC))2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இது வகைகூறும் பொறுப்பை அடையாளப் படுத்துவதற்கும் LLRCசிபாரிசுகளை நடைமுறைப் படுத்துவதற்கும் எடுக்கப் பட்டிருந்த நடவடிக்கைகளை விவரிக்கின்ற பரந்த ஒரு திட்டத்தை விரைவில் முன்வைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவளித்த மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நிமித்தம் பாடுபட்டு வந்த நபர்களுக்கு அரசாங்கம் வெளிப்படையாக தனது அச்சுறுத்தல்களை விடுத்தது. LLRCசிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டத்தை நிறைவேற்றியிருந்ததாக அரசாங்கம் யலை மாதத்தில் அறிவித்திருந்தது. இந்தக் குறித்த திட்டம் பொதுமக்கள் கொல்லப்பட்டமை பற்றி ஆராயவும் மற்றும் குற்றம் புரிந்த தரப்புகளுக்கு எதிராக வழக்குத் தொடரவும் அரசாங்கத்திற்கு தெட்டத் தெளிவான விடயங்களை முன்வைப்பதாகவில்லை. இது ஒழுக்காற்று விசாரணைகளை நிறைவு செய்வதற்காக 12மாத காலவரையறை, வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளுக்காக 24மாத கால வரையறை ஆகியன பற்றிக் குறிப்பீடு செய்கின்றது. ஆனால் அரசாங்கம் வெளிப்படைத் தன்மை செயன்முறையில் உள்ள குறை முறைகளைப் பயன்படுத்தி இராணுவம், போலிஸ், துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் முதலிய தரப்புகளுக்கு எதிரான விசாரணைகளை நடத்தும் தமது பொறுப்பிலிருந்து நழுவிவிடுகின்றது.
போர் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக 2012ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது எனக் கூறப்படுகின்ற விஷேட இராணுவ நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இருக்கவில்லை. எனினும் 2006ஆம் ஆண்டில் தனித்தனியான சந்தர்ப்பங்களின் போது மரண தண்டணைப் பாணியில் 17உதவித் தொண்டர்களையும் மற்றும் 5மாணவர்களையும் அரசாங்கப் படைகள் கொன்று குவித்தமையில் சம்பந்தப்பட்டமைக்கான வலுவான சான்றுகளிருந்த போதிலும் குற்றங்களுக்களின் நிமித்தம் எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை. போலிஸ் படையின் சுயாதீனத்துவத்தை நிலைநாட்டுவதற்கான தேவை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயல்நோக்கிலிருந்து அதனை நீக்குதல் முதலிய ஏனைய சிபாரிசுகளை முன்வைப்பதற்கான பணி இதை எழுதும் நேரத்தில் ஸ்தாபிக்கப்படவிருந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுக்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது
2012ஆம் ஆண்டு நவம்பர் மாத்தில் HRCமுன்னிலையில் தனது உலகளாவிய வழமையான மீளாய்வின் (Universal Periodic Review (UPR)) போது, இலங்கை அரசாங்கம் தனது வகைகூறும் பொறுப்பில் நேரடியான ஒரு தாக்கத்தைக் கொண்டிருக்கின்ற சில சிபாரிசுகள் அடங்கலாக 100சிபாரிசுகளை நிராகரித்தது.
தன்னிச்சையான தடுத்துவைப்பு, துன்புறுத்தல், நிர்ப்பந்த முறையில் ஆட்கள் காணாமல் போதல்
போலிஸும் பாதுகாப்புப் படைகளும் தொடர்ச்சியாக அதிகமாக பரந்தளவில் தடுத்துவைத்தல் அதிகாரங்களைப் பிரயோகித்து வருகின்றன. ஜனாதிபதியும் கூட இராணுவத்திற்கு சாதுரியமான முறையில் தேடுதல் மற்றும் தடுத்துவைத்தல் ஆகிய போலிஸ் அதிகாரங்களை கட்டளை என்ற போர்வையில் ஆயுதப் படைகளுக்கு மாதாந்தம் விடுத்து வருகின்றார்.
நிலவி வந்த சம்பிரதாய அவசர காலச்சட்டம் 2011ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தும் கூட, ஏற்கெனவே இருந்த அவசரகாலச் சட்டங்களைப் பிரயோகித்து அரசாங்கம் பல ஆயிரக்கணக்கான மக்களை எந்தவிதமான விசாரனையுமின்றி தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கின்றது. பொதுவான பொறுப்புக்களும் மற்றும் கடமைகளும் அரசாங்கத்திற்கு இருக்கின்ற போதிலும், தடுத்துவைத்த நபர்களின் பெயர்களும் தடுத்துவைத்த இடங்களும் அடங்கிய முழுமையான விபரப் பட்டியல்களை அது வெளியிடுவதற்கும் தவறியுள்ளது.
யுத்த முடிவின் போது சந்தேகத்தின் பேரில் தடுத்துவைத்த 11,000அதிகமான எல்டிடிஈ(LTTE) உறுப்பினர்களை தான் விடுவித்ததாகவும், அதே நேரம் தடுத்துவைக்கப் பட்டிருக்கின்றவர்களில் 180பேருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கை பற்றி உத்தேசிப்பதாகவும் அரசாங்கம் பிரகடனப்படுத்தியது.
2012ஆம் ஆண்டில் வட கிழக்குப் பகுதிகளில் தன்னிச்சையான தடுத்துவைப்புகள், நிர்ப்பந்த முறையில் புதிதாக ஆட்கள் காணாமல்போதல், ஆட்கடத்தல்கள் மற்றும் கொலைகள் என்பன இடம்பெற்று வந்ததாக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பாடுபடும் உள்நாட்டுக் குழுக்கள் (Local Rights Groups)தெரிவித்துள்ளன. வட பகுதிக்குப் பயணிப்பதில் காணப்பட்ட தனது கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தினாலும் கூட உயர் பாதுகாப்பு நிலைகளை இன்னும் பேணிவருகின்றது. எல்டிடிஈ(LTTE) தரப்புடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான தன்னிச்சையான தடுத்துவைப்புகளும் துன்புறுத்தல்களும் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஏப்ரல் மாதத்தில் திருகோணமலை பிரதேசத்தில் வைத்து கிட்டத்தட்ட 220தமிழ் ஆண்களும் பெண்களும் கைதுசெய்யப்பட்டு எந்தவிதமான குற்றங்களுமின்றி இராணுவ முகாம்களில் பல நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
புகலிடம் கோரிச்சென்று நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அடங்கலாக தமது தாய் நாட்டிற்குத் திரும்பிய தமிழ் மக்கள் வெளிநாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் அல்லது எல்ரீரீஈ (LTTE) தரப்புடன் அவர்கள் தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள் என்ற குற்றங்களை வீணாகச் சுமத்தி தடுத்துவைக்கப்பட்டிருந்தமை அறிவிக்கப்பட்டது. மத்திய புலனாய்வுப் பிரிவினாலும் (Central Intelligence Department)மற்றும் ஏனைய பாதுகாப்புப் படைகளினாலும் பல எண்ணிக்கையான மக்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து 30இற்கும் அதிகமான புகலிடம் கோரிய தமிழர்களை நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் தீர்மானத்தை நிறுத்துமாறு ஐக்கிய இராய்ச்சியத்திலுள்ள(United Kingdom)நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்தன.
போலிஸ் படைக்கு சந்தேக நபர்களை தனது பாதுகாப்பில் வைத்திருப்பதற்கான மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முதனிலை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்
2012ஆம் ஆண்டில் பேச்சுச் சுதந்திரம் நசுக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட HRCதீர்மானத்திற்கு ஆதராவாகக் குரலெழுப்பிய மனித உரிமை ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் அரசாங்க உயர் அதிகாரத் தரப்புகளும் அரச உடமை ஊடகங்களும் வெளிப்படையாக அச்சுறுத்தல்களை விடுத்தன. அவர்களின் பெயர்களும்,முகங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டன.இவர்கள் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். இந்த செயற்பாட்டாளர்களை அச்சுறுத்திய அமைச்சர் மெர்வின் த சில்வாவுக்கு (Mervyn de Silva)எதிராக அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பேச்சுச் சுதந்திரத்தின் மீது கடுமையான கண்காணிப்பும் அடக்குமுறைகளும் அதிகரித்திருந்ததாக ஊடகங்கள் வெளிப்படுத்தின. ஒரு செய்தி இணையத் தளமான ஸ்ரீ லங்கா மிரெர் (Sri Lanka Mirror)மற்றும் எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (United National Party)ஸ்ரீ லங்கா Xநியூஸ்(Sri Lanka X News) இணையத்தளம் முதலிய அமைப்புகளின் அலுவலர்களை 2012ஆம் ஆண்டு யூலை மாதத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு சோதனையிட்டது. இதன் போது இந்த இணையத்தள அமைப்புகள்“இலங்கையைப் பற்றிய பொய்யான பிரசாரங்களை மேற்கொள்ளவதாகவும் மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடுவதாகவும்”குற்றம் சுமத்தி இந்தப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கணினிகளையும் ஆவணங்களையும் பறிமுதல் செய்ததுடன் ஒன்பது நபர்களையும் கைதுசெய்தனர். “ஜனாதிபதிக்கு அல்லது அரசாங்கத்திற்கு எதிராக கசப்பான உணர்வுகளைத் தூண்டும் அல்லது தூண்டிவிடும் அல்லது தூண்டுவதற்கு முனையும்”நபர்களுக்கு இரண்டு வருடங்கள் வரையான சிறைத்தண்டனையை விதிக்கின்ற குற்றவியல் விதிக்கோவையின் 120ஆம் உறுப்புரையின் பிரகாரம் இந்த நபர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். குறித்த ஒன்பது நபர்கள் அவர்கள் கைதுசெய்யப்பட்ட நாளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அரசாங்கம் 2012ஆம் ஆண்டில் தனக்கெதிராக விமர்சித்ததாகக் குறைந்தது ஐந்து செய்தி இணையத்தளங்களை மூடிவிடுமாறு உத்தரவிட்டது. அதே நேரம் அரசாங்கம் தவறான சில பதிவு சார்ந்த தேவைப்பாடுகளை முன்வைத்ததுடன் இணையத்தள அடிப்படையில் அமைந்த சகல ஊடக சேவைகள் தொடர்பிலும் கட்டணங்களையும் விதித்தது. இங்கு இடம்பெறும் செய்தித்தணிப்புகளைத் தவிர்க்கும் முகமாக பல செய்தி இணையத்தளங்கள் வெளிநாடுகளிலுள்ள புகலிடங்களுக்கு நகர்ந்தன. சுவிட்சர்லாந்திலிருந்து (Switzerland)மோசமான ஒரு விடயத்தைத் தேர்ந்தெடுக்கும் நிமித்தம் ஒரு அரசாங்கத் திட்டத்தைத் திசை திருப்பும் தனது தீர்மானத்தை விமர்ச்சித்ததற்கு அரசாங்க எதிர்ப்பு சன்டே லீடர் (Sunday Leader)செய்திப் பத்திரிகையின் முன்னாள் பதிப்பாசிரியரான ப்ரெடெரிக்கா ஜான்ஸ் (Frederica Jansz)கோட்டாபய ராஜபக்ஷ (Gotabhaya Rajapaksa)யூலை மாதத்தில் தன்னை அச்சுறுத்தியதாக தெரிவித்தார் நவம்பர் மாதத்தில் இந்தச் செய்திகள் மறைந்து விட்டன. ஏனைய ஊடகங்களின் சுயாதீன அல்லது வெளிப்படையாகக் குரல்கொடுத்த நபர்களின் பதவி நிலைகளும் கூட அரசியல் அழுத்தங்களினால் பறிக்கப்பட்டமை பற்றிய அறிக்கைளும் வெளியாகியிருந்தன. 2009ஆம் ஆண்டு ஒரு போலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து முன்னைய நாள் சன்டே லீடர் (Sunday Leader) செய்திப்பத்திரிகை ஆசிரியர்திரு லசந்த விக்கரமதுங்க (Lasantha Wickrematunge)பட்டப்பகலில் இனம் தெரியாத ஆயுதக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் கொலை தொடர்பில் இது வரையில் எந்த விதமான புலனாய்வு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
2010ஆம் ஆண்டு சனவரி மாதம் 24ஆம் திகதி காணாமல்போன லங்கா இ–நியூஸுக்கான (Lanka E-news)பங்களிப்பாளர் பிரகீத் எக்னெலிகொட (Prageeth Ekneligoda)சம்பந்தமான வழக்கில் மேலும் எந்த விதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. சட்டமா அதிபர் மொஹன் பீரிஸ் (Mohan Peiris)எக்னெலிகொட (Ekneligoda)காணாமல் போகவில்லை ஆனால் அவர் தன் விருப்பத்தில் வெளிநாடு சென்றதாகக் கூறி முன்னைய கூற்றை ஒழித்து மறைத்து விட்டு கொழும்பில் (Colombo)சாட்சியமளித்து அதனை நிரூபித்தார்.
மாகாண சபைகளின் நிமித்தம் கிழக்கு மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல்களின் போது வன்முறைகளும் வாக்கு மோசடிகளும் நிறைந்து காணப்பட்டன.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களும் இராணுவ அடக்குமுறைகளும்
2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மூடப்பட்ட வவுனியாவுக்கு(Vavuniya)அருகிலிருந்த மெனிக் பார்மில் (Menik Farm)உள்ளடங்கலாக யுத்தத்தின் பின்னர் சட்டமுறையற்ற ரீதியில் இராணுவக் கட்டுப்பாட்டுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 300,000சிவிலியன்களில் இறுதியானோர் அவர்களின் சொந்த இடங்களாக இல்லாவிடினும் சமுகங்களுடன் இணைக்க்பட்டுள்ளார்கள் பல இலட்சக்கணக்கான மக்கள் புரவலன் குடும்பங்களுடன் அல்லது தற்காலிக வசதிகளுடன் இன்னும் வசித்து வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களது சொந்த இடங்களில் கன்னிவெடிகள் அகற்றப்படாமையினால் அந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையிலிருக்கின்றனர்.
அரசாங்கம் கணிசமானளவு தனது இராணுவ நிலைகளை வட கிழக்குப் பகுதிகளில் குறைத்திருப்பதாகக் கூறி வந்தாலும் அடிக்கடி இராணுவம் அங்குள்ள பொது மக்களின் வாழ்க்கையில் இன்னும் தலையிடுவதாக நம்பத்தகுந்த புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. வட கிழக்குப் பகுதி தொடர்பான பாதுகாப்பு அமைச்சினது ஒலிநாடாவில் பாடசாலைகளில் கிரிகெற் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கோவில்களில் விழாக்கள் முதலியவற்றை ஏற்பாடு செய்தல் அடங்கலாக பல பொதுச் செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபடும் காட்சி காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் நிஜத்தில் இராணுவ வீரர்கள் இராணுவ வீரர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளுகின்ற நிலை காணப்படுகின்றது. தமது வாழ்வாதாரங்களில் தாக்கங்களை ஏற்படுத்தி தமது நிலங்களையும் கடலோரப் பகுதிகளையும் ஆயுதப் படைகள் தொடர்ந்தும் அபகரித்து வருவதாக மீனவர்களும் (Fishermen)விவசாயிகளும் (Farmers) புகார் செய்துள்ளனர்.
முக்கிய சர்வதேச செயற்பாட்டாளர்கள்
வகைகூறும் விடயங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்கத் தவறியதன் பின்னர் முக்கிய பல சர்வதேச நிறுவனங்கள் விடுத்து வருகின்ற பெரும் அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கி வருகின்றது. மார்ச் மாதம் நடைபெற்ற HRCஅமர்வில் இலங்கை அரசாங்கம் தனது வகைகூறுவது தொடர்பில் ஒருமுகப்படுகின்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து சபையைத் தடுக்க முயன்றது. ஆதரவாக 24வாக்குகளையும், எதிராக 15வாக்குகளையும் பெற்று குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் 8உறுப்பு நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகிக் கொண்டன. குறித்த சபையின் 2009மே மாதத் தீர்மானம் இலங்கையில் நிலவிய யுத்த காலத்தின் போது இடம்பெற்ற கடுமையான மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகளைப் பாராதீனப்படுத்தி விட்டு சாதுரியமான முறையில் தலைகீழாக மாறியது. இந்தத் தீர்மானத்திற்கு வாக்களித்த நைஜீரியா (Nigeria)அடங்கலாக உருகுவே (Uruguay)மற்றும் இந்தியா (India)ஆகிய நாடுகள் தமிழ்நாடு அரசு (Tamil Nadu State)மற்றும் வகைகூற வேண்டிய தன்மையை வலியுறுத்தும் சிவில் சமூக ஆதரவாளர்கள் ஆகிய தரப்புகளிடமிருந்து வருகின்ற அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றன. குறித்த தீர்மானம் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரது ஐ.நா அலுவலகம் (OHCHR)2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் அறிக்கையிட வேண்டுமென்பதை வலியுறுத்தி நிற்கின்றது.
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான குற்றங்களை அடையாளப்படுத்துமாறும், LLRCசிபாரிசுகளை நடைமுறைப்படுத்துமாறும், சிறுபான்மைத் தழிழ் மக்களுடன் இணைந்து ஒரு நல்லிணக்க நடைமுறையை முன்னெடுக்குமாறும் இந்தியா தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றது.
சீனா (China)அண்மை காலங்களில்களில் இலங்கை அரசாங்கத்தின் முக்கியமான ஒரு இணைத் தரப்பாக வெளிப்பட்டுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதில் அதிகளவான முதலீட்டை மேற்கொள்ளவிருப்பதால் குறித்த ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கான பல சீன (China)உயர் மட்ட இராஜதந்திர மற்றும் இராணுவ குழுக்கள் இலங்கை மீதான HRCதீர்மானத்தை வாயளவில் எதிர்த்தது.